பணவீக்கம் எகிறப்போவது என்பதில் ஐயமில்லை. புத்ரா ஜெயா 60 அடிப்படைப் பொருள்களுக்கு பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) விதிக்க விரும்புவதுதான் இதற்குக் காரணம் என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி.
ஒரு தேர்ந்த கணக்காளருமான ரபிசி, இதன் விளைவாக பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் கொதித்தெழுவார்கள் என எச்சரித்தார்.
“அவற்றில் ஒரு பகுதி இறக்குமதி செய்யப்படும் பழங்களும் காய்கறிகளுமாகும் என்றாலும் பெரும்பாலான மலேசியர்கள் பயன்படுத்தும் அடிப்படை உணவுப் பொருள்களும் அவற்றில் அடங்கும்”, என்றாரவர்.
6 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படும் அப்பொருள்களில் உருளைக்கிழங்கு, பயிற்றங்காய், பட்டாணி, பசலைக்கீரை, சோளம், பல்வகை noodleகள், தேங்காய் எண்ணெய் முதலியவை அடங்கும்.
“உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பது மக்களின் கோபத்தைத்தான் தூண்டிவிடும் எனப் பிரதமருக்கு எச்சரிக்கிறேன்”, என்று கூறிய ரபிசி அரசாங்கம் அதன் முடிவைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஐயா ரபிசி…வேலை இல்லாதவன் பொண்டாட்டிய சிரைச்ச மாதிரி அந்நிய முதலீடுகளை கொண்டுவர முடியாதவர்கள் இப்படித்தான் கண்டதற்கும் வரி விதித்து பொருளாதாரச் சிக்கலை தீர்க்க வேண்டும். இதில் (சீரியசான) காமெடி என்னவென்றால் ஏற்கனவே திவாலானவர்களின் பட்டியல் நாட்டில் எகிறிவிட்டது. அது இன்னும் எகிறும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கு உள்ளது இரண்டே தீர்வுகள் தான்.
தீர்வு 1. மலேசியர்கள் அனைவரும் தினமும் 12- மணிநேரம் உழைக்கவும் வேலை செய்யவும் தயாராக இருக்கவேண்டும். உழைப்புக்கும் வேலைக்கும் அவர்கள் சம்பளமோ ஊதியமோ பெறக்கூடாது. பதிலாக ஒவ்வொருவருக்கும் அடிப்படைத் தேவைகளான பல்கலைக்கழகங்கள் வரையிலான இலவச கல்வி, குறைந்த பட்சம் ஒரு நல்ல வீடு. ஒரு நல்ல கார், 4- ஏக்கர் நிலம் தரப்பட வேண்டும். இலவச மின்சாரம், இலவச தண்ணீர், இலவச பெற்றோல், இப்படி எல்லாமே இலவசமாகக் கோர வேண்டும். பிறகு காசு என்ற பெயரில் சம்பளம் எதற்கு? இப்படி நான் சொல்லக் காரணம் இன்று நம்மில் பலபேர் ஒவ்வொரு மாதமும் வாங்கும் சம்பளம் போதவில்லை என்று ஆலோங் வரை சென்று கடன் வாங்கி பிறவிக் கடனாளியாகிறார்கள். பள்ளி வாழ்க்கை மற்றும் பல்கலைக்கழக வாழ்க்கை முடிந்து வெளிவரும் ஒவ்வொருத்தனும் கடனாளி எனும் பட்டத்தோடு வெளிவரும் பட்சத்தில் அவன் மரணம் வரை நிம்மதியாகத் தூங்கக்கூட முடியாத ‘கடன்’ சிஸ்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறானே..
தீர்வு 2. அது உங்களுக்கும் மக்களில் பலருக்கும் இப்போது புரிந்திருக்குமே..வரும் பொதுத் தேர்தல் தான்.