கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து புதிய ஜிஎஸ்டி திட்டம் கைவிடப்பட்டது

1 subஜூலை  முதல்   நாளிலிருந்து  புதிதாக   60  உணவுப்  பொருள்களுக்குப்   பொருள்,    சேவை    வரி  (ஜிஎஸ்டி)   விதிக்கும்    திட்டத்தை   அரச  மலேசிய     சுங்கத்   துறை   கைவிட்டது.

அப்பொருள்கள்  ஜிஎஸ்டி   பட்டியலில்    இடம்பெறுவதாக    அறிவிக்கப்பட்டதும்    ஊடகங்களில்   எழுந்த   எதிர்ப்பு   குறித்து   நிதி  அமைச்சின்   ஆலோசனை   நாடப்பட்டு    அதன்   ஆலோசனையின்பேரில்  அத்திட்டத்தை   இரத்துச்   செய்ய   முடிவு    செய்யப்பட்டதாக     சுங்கத்துறை   தலைமை    இயக்குனர்    டி.சுப்ரமணியம்    கூறினார்.