அமெரிக்கத் தூதரகம்: மலேசியாவிடமிருந்து ஆட்சேபக் குறிப்பு ஏதும் வரவில்லை

 

Americanembassynonoteஅமெரிக்க நீதித்துறையின் (டிஒஜே) 1எம்டிபி-தொடர்புடைய சிவில் பறிமுதல் செய்தல் வழக்கு இந்நாட்டின் விவகாரத்தில் தலையிடும் ஒரு விதமான செயல் என்று பல அமைச்சர்கள் கூவியிருந்த போதிலும், அமெரிக்க நீதித்துறை எந்த ஓர் ஆட்சேபக் குறிப்பையும் இதுவரையில் பெறவில்லை.

டிஒஜே கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ள சிவில் 1எம்டிபி-தொடர்புடைய யுஎஸ்$1.7 பில்லியன் மதிப்புடைய சொத்துகள் பற்றி புத்ராஜெயாவிடமிருந்து எவ்வித ஆட்சேபக் குறிப்பையும் பெறவில்லை என்று அமெரிக்க தூதரகம் மலேசியாகினிடம் உறுதிப்படுத்தியது.

“எங்களுக்குத் தெரிந்தவரையில் எதுவும் இல்லை”, என்று தூதரகத்தில் ஊடக உறவு அதிகாரி டிரேக் விசெர்ட் தொடர்பு கொண்ட போது கூறினார்.

அந்த 251 பக்க பத்திரத்திற்கு எதிராக முறையான ஆட்சேபம் எழுப்பும் உடனடித் திட்டம் எதனையும் புத்ராஜெயா கொண்டிருக்கவில்லை என்பதையும் மலேசியாகினி அறிந்துள்ளது.