அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்ததே இல்லை என்கிறார் மகாதிர்

 

Mnevermetusofficialsஅமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தாக்கல் செய்துள்ள மிக அண்மைய 1எம்டிபி சொத்துகள் சம்பந்தப்பட்ட வழக்கின் பின்னணியில் எதிர்க்கட்சி இருப்பதாகக் கூறப்படுவதை எள்ளிநகையாடினார் முன்னாள் பிரதமர் மகாதிர்.

“நான் எந்த ஓர் அமெரிக்க அதிகாரியையும் சந்தித்ததே இல்லை”, என்று சேனல் நியுஸ் ஆசியாவுடன் இன்று நடந்த ஒரு நேர்காணலில் மகாதிர் கூறினார்.

அமெரிக்கா அரசாங்கத்தின் மீது எங்களுக்கு எந்த செல்வாக்கும் இல்லை. அமெரிக்க அரசாங்கத்தின் மீது எவரும் செல்வாக்கைப் பயன்படுத்த முடியாது என்பது உங்களுக்கும் தெரியும். அமெரிக்க டிரம்ப்கூட சிரமப்படுகிறார் என்றார் மகாதிர்.

நேற்று, பிரதமர்துறையின் அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாலான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதற்கான அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துவதற்கு புகார் செய்தவர் யார் என்பதை டிஒஜே வெளியிட வேண்டும் என்றார்.

1எம்டிபியிலிருந்து யுஎஸ்$1 பில்லியன் மதிப்புடைய சொத்துகள் திருடப்பட்டது என்று கூறும் டிஒஜே, அதனைப் பறிமுதல் செய்வதற்காக வழக்கு தொடர்ந்துள்ளது.