அம்னோவின் கோட்பாடுகளும் போராட்டங்களும் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றின் கௌரவத்தை ஆதரிப்பதாக இவ்வளவு காலமாக இருந்து வந்துள்ளதால், பாஸ் விரும்பும் கட்சியாக அம்னோ இருக்கிறது என்று பிரதமர் நஜிப் ரசாக் கூறுகிறார்.
பாஸ் கட்சி எதிரணியில் இருந்த போது டிஎபியால் கொடுமைபடுத்தப்பட்டது. ஆனால், பாஸ் இப்போது அம்னோவை முஸ்லிம்களுக்கு பெருமளவில் உதவும் கட்சியாக காண்கிறது.
நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அரசாங்கம் அம்னோவின் கீழ் போராட்ட கோட்பாடுகளைக் கொண்டிருப்பதால், அவர்கள் (பாஸ்) நமது போராட்டம் முஸ்லிம்களின் கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக உணர்ந்துள்ளனர்.
டிஎபியுடன் இருக்கையில் பாஸ் பட்டப்பாடு போதும் என்றாகி விட்டதால், அவர்கள் அங்கிருந்து ஓடிவந்து விட்டனர் என்று நஜிப் மேலும் கூறினார்.
நேற்று, ஜித்ராவில் நடைபெற்ற ஒரு நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் நஜிப் இவ்வாறு கூறினார்.
அந்நிகழ்ச்சியில் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரும் இருந்தார்.
இஸ்லாத்திற்கு போராட என்ன இருக்கிறது? அதனை நீங்கள் ஒழுங்காக கடைப்பிடித்தாலே போதும்! இரு கட்சிகளும் சேர்ந்து புதிய இஸ்லாமை உருவாக்க நினைக்கிறீர்களோ!
வேற வழி இல்லாமால் நிலா கட்சியுடன் தேர்தல் குருட்டணி வைத்து நிலா கட்சியையும் ஒட்டு மொத்தமா காலி செய்ய திட்டம் தீட்டியாச்சு.
திருடனுக்கு திருடன்தானே துணை இருப்பான்