ஜொஹாரி: புதிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பதற்கு அமைச்சரவை அனுமதி தேவை

johariபுதிய  பொருள்களுக்கு   பொருள்,  சேவை   வரி  விதிப்பதாக   இருந்தால்    அமைச்சரவையின்    அனுமதி    தேவை    என   இரண்டாம்   நிதி  அமைச்சர்    ஜொஹாரி    அப்துல்    கனி    கூறினார்.

ஜூலை  முதல்   நாளிலிருந்து  புதிதாக   60  வகை  உணவுப்  பொருள்களுக்குப்   (ஜிஎஸ்டி   விதிக்கும்    திட்டம்    கைவிட்டது    குறித்துக்  கருத்துரைத்தபோது   ஜொஹாரி  இவ்வாறு   கூறினார்.

“எந்தவொரு   பொருளுக்கும்   ஜிஎஸ்டி   விதிப்பதற்குமுன்   சுங்கத்துறை    அதை    நிதி    அமைச்சுக்குத்    தெரியப்படுத்த    வேண்டும்.   நாங்கள்   அமைச்சரவையின்   கவனத்துக்குக்   கொண்டு   செல்வோம்.

“அமைச்சரவையின்    அனுமதியின்றி   அது (சுங்கத்துறை)      ஜிஎஸ்டி  விதிக்க   முடிக்க   முடியாது”,  என்றாரவர்.