எம்பிஐ குழும நிறுவனங்களில் அதிரடிச் சோதனை: பல மில்லியன் ரிங்கிட் வங்கிக் கணக்குகள் முடக்கம்

mbiநேற்று  பினாங்கிலும்    கெடாவிலும்,    திடீர்  பணக்காரராகும்   திட்டத்தை    நடத்தும்   நிறுவனங்களுக்கு    எதிராக,     உள்நாட்டு   வாணிக,   கூட்டுறவு   பயனீட்டாளர்   விவகார   அமைச்சு,   பேங்க்   நெகாரா,   போலீஸ்,   சட்டத்துறை     அலுவலகம்     ஆகியவை        கூட்டாக    மேற்கொண்ட     அதிரடிச்   சோதனையில்   1/2 மில்லியன்  ரிங்கிட்  ரொக்கமாக  பிடிபட்டது,  ரிம27  மில்லியன்   கொண்ட   வங்கிக்  கணக்கு  ஒன்று   முடக்கப்பட்டது.

அமைச்சு   வெளியிட்ட   பத்திரிகை   அறிக்கை    ஒன்று    ரிம688,000  ரொக்கமும்   மூன்று   ஆடம்பர  கார்களும்  –  ஒரு   ரேஞ்ச்   ரோவர்,    ஒரு   ஜாக்குவார்,   ஒரு  டொயோட்டா    வெல்பாயர் –  கைப்பற்றப்பட்டதாகக்  கூறியது.

“அது   எம்பிஐ  குழுமம்   பினாங்கிலும்   கெடாவிலும்    நடத்தும்   பிரமிட்   திட்டங்களுக்கு    எதிரான    அதிரடி   நடவடிக்கையாகும்”.