ரபிசி: 60 உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதற்கு நிதி அமைச்சே பொறுப்பு, சுங்கத்துறை அல்ல

gstகூடுதலாக    60  வகை  உணவுப்  பொருள்களுக்குப்  பொருள்,  சேவை   வரி   விதிக்க   (ஜிஎஸ்டி)   நிதி   அமைச்சின்   அனுமதியைப்   பெறாமலேயே    மலேசிய     சுங்கத்துறை     முடிவு   செய்து   விட்டது    என்று   கூறிய   இரண்டாம்   நிதி  அமைச்சர்   ஜொஹாரி   அப்துல்   கனியை   பிகேஆர்   உதவித்    தலைவர்   ரபிசி   ரம்லி    சாடினார்.
புதிய  பொருள்களுக்கு   பொருள்,  சேவை   வரி  விதிப்பதாக   இருந்தால்    அமைச்சரவையின்    அனுமதி    தேவை   என்று   ஜொஹாரி   கூறியதாகக்  குறிப்பிடும்    பெர்னாமா   செய்தியை   ரபிசி    சுட்டிக்காட்டினார்.

அமைச்சின்   அனுமதியைப்   பெறாமல்   சுங்கத்துறை   அளவில்    உத்தேச  ஜிஎஸ்டி-யை   விதிக்க   தீர்மானித்து   விட்டதாக   ஜொஹாரி    கூறியுள்ளார்.

உண்மி    அதுவல்ல   என்று   கூறிய  ரபிசி,  இவ்விவகாரத்தில்   சுங்கத்துறை   தலைமை   இயக்குனரும்   அதிகாரிகளும்    பலிகடா    ஆக்கப்பட்டிருக்கிறார்கள்    என்றார்.

“60  உணவு  வகைகளுக்கு   ஜிஎஸ்டி   விதிக்க    அனுமதி    கோரும்   தீர்மானமொன்றை    அமைச்சு    மக்களவையில்   தாக்கல்    செய்தது.

“துணை   நிதி   அமைச்சர்     ஒத்மான்   அசிஸ்    அத்தீர்மானத்தைத்    தாக்கல்    செய்தது    இன்னும்   நினைவில்    இருக்கிறது”,  என  ரபிசி   இன்று   ஓர்    அறிக்கையில்    கூறினார்.

“கொய்  தியாவ்,  லக்சா,   மஞ்சள்நிற  மீ   போன்ற   உணவுப்பொருள்களுக்கு   வரி  விதிக்கப்படும்   என்றவர்  விளக்கினார்”.  நாடாளுமன்ற     நடவடிக்கைகளை    விவரிக்கும்   அதிகாரப்பூர்வ   அறிக்கைகளையும்   (Hansard)  ரபிசி    சுட்டிக்காட்டினார்.

வரிவிதிப்பு     நடைமுறை     குறித்து    விளக்கிய     ரபிசி,    பொருள்,  சேவை   வரி  விதிக்கப்படும்    புதிய   பொருள்களின்  பட்டியல்   நாடாளுமன்றத்தில்   ஏற்றுக்கொள்ளப்பட்டதும்     அது   சட்டப்படியான    ஆவணமாக   மாறி  விடுகிறது  என்றார்.

“அது  சட்டப்படியான   ஆவணமாக   மாறியதும்    அதை   அமல்படுத்துவது      சுங்கத்துறையின்   பொறுப்பாகும்.
“எனவே,   நாடாளுமன்றத்தில்     தீர்மானம்    கொண்டு   வந்து      60  உணவுப்பொருள்களுக்கு   வரி  விதிக்கும்   அனுமதியைப்  பெற்றது   நிதி   அமைச்சுத்தான்   என்கிறபோது   ஜொஹாரி      சுங்கத்துறைமீது   பழி   போடுவது   பொறுப்பற்றத்தனமாகும்”,  என்றார்.

இவ்விவகாரத்துக்கு   ஜொஹாரியும்   நிதி  அமைச்சருமான   பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்கும்தான்   பொறுப்பு    என  ரபிசி    குறிப்பிட்டார்.