அமெரிக்க நீதித்துறையின் மிக அண்மைய பறிமுதல் செய்தல் வழக்கு பற்றி பீதியடைய வேண்டாம் என்று மலேசியர்களை பிரதமர்துறையின் அமைச்சர் அஸலீனா ஓத்மான் கேட்டுக்கொண்டார்.
இந்தக் குற்றச்சாட்டுகளால் எளிதில் ஏமாறக்கூடிய சில தரப்பினர்கள் இருப்பது குறித்து தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான அவர் கூரினார்.
அமெரிக்கா ஏதாவது நடந்து விட்டது என்று கூறினால், அதைச் சோதிப்பதில்லை. அதை நம்பிவிட வேண்டியதுதான் என்று அமைச்சர் கூறியதாக பெர்னாமா தெரிவிக்கிறது.
எல்லா நாடுகளும் அவற்றுக்கான சட்ட முறைகளைக் கொண்டிருக்கின்றன, அமெரிக்காவும் மலேசியாவும் அதில் அடங்கும்.
என்னைப் பொறுத்தவரையில், டிஒஜே அமெரிக்க சட்ட முறையாகும். வழக்கை தாக்கல் செய்வது அவர்களைப் பொறுத்ததாகும். அது ஒரு சிவில் விவகாரமாகும் என்றார் அஸலீனா.
“நமது நாட்டில், நமக்கு நாடாளுமன்ற முறை, நீதிமன்ற முறை மற்றும் சட்ட முறை இருக்கின்றன. நமக்கு இவ்வளவும் இருக்கின்றன. ஆகவே, நாம் நமது வழிப்படி செய்வோம்”, என்று அவர் மேலும் கூறினார்.
எங்களுக்கு என்ன பீதி? உங்களுக்க்கு உள்ள பீதியை மறைக்க ஏதோ எங்களுக்கு உபதேசம் செய்கின்ற மாதிரி பேசரிங்க!
நீங்கள் மக்களில் ஒருவர்.கோடிக்கணக்கான மக்கள் நீங்கள் சொல்வது உண்மை என்று நம்பிவிடுவார்களா என்ன?
ஏதோ பீதியில் உளறுவது போல் இருக்கிறது! வழிப்படி செய்யுங்கள்! வழிப்பறி செய்ய வேண்டாம்!
மக்கள் ஏன் பீதி அடைய வேண்டும்? என்னடி– அளக்கிறே?