சுங்கை டூலாங்கில் ஆளற்ற ஒரு செம்பனைத் தோட்டம். அங்கு 22 வாக்காளர்கள் இருப்பதாக பதிவாகியிருப்பதுதான் ஆச்சரியம்.
2017, முதல் காலாண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இக்குறைபாட்டைக் கண்டதாகக் கூறுகிறார் ஹுத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் கேசவன் சுப்ரமணியம்.
“அங்கு வீடு இல்லை; மரங்கள் மட்டும்தான் உண்டு ஆனால், 22 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.
“இது அரசிதழில் வெளியிடப்படுமா? சட்டப்பூர்வமாக்கப்படுமா? இதை அரசிதழில் வெளியிட்டால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியுமா? அங்குள்ள மரங்களா வந்து வாக்களிக்கப் போகின்றன?”, என்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் கேள்விகளாக அடுக்கினார் கேசவன்.
வழக்கமாக ஹுத்தான் மெலிந்தாங்கில் , ஒவ்வொரு காலாண்டிலும் 150- 200 புதிய வாக்காளர்கள் பதிந்து கொள்வார்கள், 10-20 முகவரி மாற்றங்கள் இருக்கும்.
ஆனால், 2017, முதல் காலாண்டுக்கான துணை வாக்காளர் பட்டியலில் 1,400 புதிய வாக்காளர்கள் பதிந்து கொண்டிருந்தார்கள், 1,500 முகவரி மாற்றங்கள் இருந்தன.
சரிபார்த்ததில் அதில் முக்கால்வாசி பொய்யானவை என்று தெரிய வந்ததாக கேசவன் தெரிவித்தார்.
இப்படி எல்லாம் செய்யாவிட்டால் தேர்தலில் எப்படி ஜெயிப்பது? இதெல்லாம் ஒரு உத்தி. மற்ற எவ்வளவு உத்திகள் இருக்கின்றன? நானும் பல முறை சொல்லிவிட்டேன்– நம்பிக்கை நாயகன் –
அது “பங்களா” வாக மாறி வாக்களிக்கலாம்!