மலேசியன் அதிகாரி 1-இன் மனைவியிடமிருந்து ரிம128 மில்லியன் மதிப்புடைய அல்லது 28 வகையான நகைகளை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கர் பறிமுதல் செய்ய வேண்டும் என்று பார்டி அமனா நெகாராவின் (அமனா) நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட் வலியுறுத்துகிறார்.
அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தொடர்ந்துள்ள வழக்கில் ஐஜிபி தலையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
காலிட் அபு பாக்கர் தாமாகவே அந்த நகைகளை எம்ஒ1-இன் மனைவியிடமிருந்து எடுத்துக் கொண்டு வந்து அவர் எப்பிஐவிட (FBI) சிறந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அவ்வாறான கடும் நடவடிக்கைக்காக மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்”, என்று காலிட் சாமாட் அவரது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.
முன்னதாக, டிஒஜே தொடர்ந்துள்ள வழக்கு ஒரு சிவில் வழக்கு என்பதால், போலீஸ் தலையிடாது என்று ஐஜிபி கூறியிருந்தார்.