பிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து அகற்றுவதற்கு மகாதிர் அவரது முன்னாள் தீவிர எதிரிகளுடன் இணைந்துள்ளார். அடுத்த பொதுத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவும் அவர் பேசப்பட்டு வருகிறார்.
சேனல் நியூஸ் ஆசியாவுக்கு அளித்த நேர்காணலில், 1981 லிருந்து 2003 ஆம் ஆண்டு வரையில் பிரதமாக இருந்த மகாதிர், மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் தமக்கு விருப்பம் இல்லை என்று கூறுகிறார்.
“ஆனால், இறுதியில், யாரும் முன்வரவில்லை என்றால், ஒரு வேட்பாளர் குறித்து அனைவரும் ஒப்புக்கொள்ளவில்லை என்ற நிலையில், அவர்கள் என்னைச் சுட்டிக் காட்டினால், நான் பதவியிலிருந்து விலகி ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அதற்கு நான் விடையளிக்காமல் இருப்பது பண்பற்ற செயலாகும்.
“வேறு வேட்பாளர்கள் இல்லையென்றால், கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் நான் பகுதி-நேர, இடைக்கால பிரதமராக இருக்க ஒப்புக்கொண்டால், நான் திரும்பி வருவேன்”, என்று மகாதிர் கூறினார்.
எனினும், நாட்டின் மறுசீரமைப்பில் தாம் பங்குகொள்ள விரும்புவதை ஒப்புக்கொண்டதோடு (நஜிப்) செய்தவற்றை தலைகீழாக மாற்ற வேண்டும், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு தம்மிடம் சில வியூகங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆனால், இதில் தாம் உத்தரவிடுவதற்கு இல்லை, ஏனென்றால் கூட்டணியில் இதர கட்சிகள் இருக்கின்றன.
‘யார் மிகத் தகுதியானார் என்பதை நாம் அமர்ந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.
“நான் அம்னோவில்கூட உத்தரவிட்டதில்லை. ஆனால் இதை மக்கள் நம்புவது மிகக் கடினம்”, என்று மகாதிர் மேலும் கூறினர்.