அனுவார்: டிஒஜெ மலேசியாவில் முஸ்லிம் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கூட்டுச் சதி செய்கிறது

 

Annuarconspiracyஅமெரிக்க நீதித்துறை 1எம்டிபி சொத்துகள் சம்பந்தமாக தொடர்ந்துள்ள வழக்கு மலேசியாவின் விவகாரங்களில் தலையிடுவதற்கான கூட்டுச் சதி திட்டத்தின் ஓர் அங்கம், ஏனென்றால் இந்நாடு முஸ்லிம்-வழிநடத்தும் அரசாங்கத்தைக் கொண்டிருக்கிறது என்று அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசா கூறுகிறார்.

14 ஆவது பொதுத்தேர்தல் ஆகஸ்ட், செப்டெம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறக்கூடும் என்பதால், அவர்கள். குறிப்பாக டிஒஜே, அதிகாரத்தைப் பெற விரும்புவர்களுடன் இணைந்து, ஓர் இரகசிய, கவனமான மற்றும் வெற்றிகாணக்கூடிய திட்டத்தின் வழி தாக்குதல் நடத்தி ஆட்சியை மாற்ற விரும்புகின்றனர்.

அவர்களுக்கு உண்மை தேவையில்லை. அவர்கள் இலக்காகக் கொண்டிருக்கும் நாட்டின் சட்ட ஆளுமையைப் பின்பற்ற வேண்டிய தேவை இல்லை. ஒரு புகார், குற்றச்சாட்டுகள், மறைமுகமாகச் சொல்லுதல் மற்றும் நாட்டில் நிலையற்றதன்மை நிலவுதல் போன்ற தோற்றத்தை உருவாக்குதல் ஆகியவை போதுமானதாகும்.

அமெரிக்க தலையீட்டிற்கு எடுத்துக்காட்டாக ஈராக் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை அவர் சுட்டிக்காட்டினார்.

நிலைமை இவ்வாறு இருக்கையில், அம்னோ உறுப்பினர் அவர்களுடைய தலைவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அனுவார் மூசா வலியுறுத்தினார்.