பெல்ஜியம் படையினர், பிரஸ்ஸல்ஸ் ரயில் நிலையத்தில் தற்கொலை குண்டு வெடிப்பாளர் என்று சந்தேகிப்பட்ட ஒரு நபரைச் சுட்டுக் கொன்றனர். அச்சம்பவத்தில் வேறு யாரும் காயமடையவில்லை.
அந்நபர் அந்நகரின் மத்திய ரயில் நிலையத்தில் ஒரு சிறு வெடிப்பை உண்டுபண்ணினார் என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த படைவீரர்கள், அவரைச் சுட்டுக் கொன்றனர். கடந்த ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பிரஸ்ஸல்ஸில் காவல் முடுக்கி விடப்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அந்நபர் இஸ்லாமிய சுலோகங்களை முழங்கினார் என்று கூறினாலும் அதிகாரிகள் அது குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவரின் அடையாளமும் தெரிவிக்கப்படவில்லை.