வைரம் தொடர்பான டிஓஜே-இன் கூற்று பொய்யென்று நிரூபிக்க முடியுமா? ரஹ்மானுக்கு புவா சவால்

dapஅமெரிக்க   நீதித்துறை(டிஓஜே)   மலேசிய   முதன்மை   அதிகாரி(எம்ஓ1)யின்   துணைவியாருக்கு   இளஞ்சிவப்பு   வைரம்  ஒன்று    பாரிசாகக்   கொடுக்கப்பட்டது     என்று   கூறியது   பொய்யென்று    நிரூபிக்க   முடியுமா     என  எதிரணி   எம்பி   ஒருவர்    பிரதமர்துறை    அமைச்சர்    ரஹ்மான்   டஹ்லானுக்கு  எதிரணி   எம்பி   ஒருவர்      சவால்  விடுத்துள்ளார்.

அந்த  வைரம்   எப்படிப்   பெறப்பட்டது   என்ற   விவரத்தை     டிஓஜே   வெளியிட்டிருப்பதை    அடுத்து    பெட்டாலிங்   ஜெயா    உத்தாரா   எம்பி     டோனி    புவா  இவ்வாறு   சவால்   விடுத்தார்.

அந்த    வைரம்   பதிக்கப்பட்ட    சங்கிலி    ஹாங்காங்கில்    எம்ஓ1  துணைவியாரின்   நண்பர்     ஒருவரிடம்    ஒப்படைக்கப்பட்டதாக    டிஓஜே    கூறியிருப்பதையும்   பொய்யென்று   டஹ்லான்     நிரூபிக்க     வேண்டும்    என  புவா   விரும்புகிறார்.
“மேற்படி   குற்றச்சாட்டுகள்    பொய்யானவை    என்பதற்கு   அப்துல்   ரஹ்மான்    ஆதாரங்களைக்   காண்பிப்பாரானால்,  டிஓஜே-இன்   குற்றச்சாட்டுகளைப்   பகிரங்கமாகக்   கண்டிக்கும்     செய்தியாளர்    கூட்டத்தில்   அவருடன்   எதிரணியிலிருந்து   முதல்    ஆளாக    நானும்  சேர்ந்து   கொள்வேன்  என்பதை   அமைச்சருக்கும்   அமைச்சரவையில்    உள்ள   மற்றவர்களுக்கும்    உறுதியாகத்       தெரிவித்துக்கொள்கிறேன்”,  என   புவா   இன்று   ஓர்    அறிக்கையில்    கூறினார்.

ஆனால்,  டிஓஜே-இன்   குற்றச்சாட்டு   உண்மையானது    என்றால்  அம்னோ   அமைச்சர்    அது   குறித்து    போலீசிலும்   மலேசிய    ஊழல்தடுப்பு    ஆணையத்திடமும்   புகார்     செய்ய   வேண்டும்   என்றார்.