அன்வாருக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு IIஇல் அரசு தரப்பு வழக்குரைஞராக செயல்பட்ட முகம்மட் ஷாபி அப்துல்லாவுக்கு ரிம9.5 மில்லியன் பிரதமர் நஜிப் அளித்தார் என்ற குற்றச்சாட்டு வெளியானதைத் தொடர்ந்து அந்த வழக்கில் அன்வார் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை தள்ளுபடி செய்யக் கோரி அன்வார் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.
நீதிபதி கமாலுடின் முகமட் சைட் இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார். அன்வாரின் மனுவுக்கான பதில் ஜூலை 12 க்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
அன்வாரின் மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முகமட் ஷாபி அவருடைய பதிலை ஜூலை 19 க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டதாக அன்வாரின் வழக்குரைஞர் லத்திபா கோயா.
பதில் அளித்தால் வரவேற்போம்! இல்லாவிட்டால் பல்லிளிப்போம்
எல்லாம் காற்றோடு காற்றாய் கலந்து விடும்.