அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) 1எம்டிபி சொத்துகள் சம்பந்தமாக தொடர்ந்துள்ள மிக அண்மைய சிவில் வழக்கில் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தும் எதிர்க்கட்சியினரை ஓர் அம்னோ தொகுதி தலைவர் சாடியுள்ளார்.
சுயநலம் கொண்ட சில தரப்பினர் இந்த வழக்கில் ரோஸ்மாவை சம்பந்தப்படுத்துவது பற்றி ஸைட் அலி அல்பாஷி வருத்தம் தெரிவித்தார்.
“ஒன்று தவறானதாக இருக்கும் போது, அது போலியானது எனப் பொருள்படும், அப்படியானால், ஏன் பொய்யைப் பரப்ப வேண்டும், இது. அவதூறாகும்.
“இது அம்னோவின் எதிரிகள் பரப்பும் அவதூறுகளின் ஒரு பாகம் ஆகும். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பிரதமரின் மனைவியை பலிகாடாவாக்குகின்றனர்”, என்று அவர் தமது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
ரோஸ்மா, இதர மலேசிய குடிமக்களைப் போல், நீதி மற்றும் தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கான உரிமை ஆகியவற்றை பெறுவதற்கான தகுதியைப் பெற்றிருக்கிறார் என்று அவர் மேலும் கூறினார்.
“மற்ற மலேசிய குடிமக்களை போல தற்காத்துக் கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கிறார்” தானே? அப்புறம் ஏன் உங்களுக்கு இவ்வளவு அக்கறை?
ராணியை தற்காத்து பேசினால் பெரிய எலும்பு துண்டு கிடைக்கும் ராஜாவிடம் இருந்து அல்லவா?