கேமரன் மலை, பிரிஞ்சாங் ஒருவழிப் பாதை நிர்மாணிப்பு திட்டத்தைக் கைவிடுக, வட்டார மக்கள் கோரிக்கை

Slide1கேமரன் மலை – பிரிஞ்சாங் ஒருவழிப் பாதை நிர்மாணிப்புக்கு எதிராக அவ்வட்டார மக்கள் ஒன்றுகூடி, தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

இன்று காலை, சுமார் 500 பேர் கையெழுத்திட்ட     கொரிக்கை மனு ஒன்று, மலேசிய சோசலிசக் கட்சி, கேமரன் மலை கிளையின் தலைமையில் காவல்துறை, பொதுப்பணித் துறை மற்றும் மாவட்ட மன்ற பொறுப்பாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த 2008 இல், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இந்த ஒருவழி ப்  பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இத்திட்டத்தினால் பாதிப்புக்குள்ளான வட்டார மக்கள் ஜூன் 2008 இல் பொதுப்பணித்துறை இலாகா முன் ஒன்றுதிரண்டு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, இத்திட்டம் கைவிடப்பட்டு, விடுமுறை நாள்களில் மட்டும் கடைப்பிடிக்குமாறு உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆயினும், இத்திட்டத்தினால், போக்குவரத்து நெரிசலில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை என்பது வட்டார மக்களின் குறைபாடு.

“ஆக, தோல்வியடைந்த இத்திட்டத்தை ஏன் மீண்டும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்,” எனsuresh  பி.எஸ்.எம். கேமரன் மலை கிளைப் பொறுப்பாளர் திரு சுரேஸ்குமார் கேள்வி எழுப்பினார்.

“மார்ச் 2017 இல் இரண்டாம் முறையாகத் தொடங்கப்பட்ட போது, இத்திட்டம் ஒரு மாத காலத்திற்கு ஓர் ஆய்வுக்காக மட்டுமே என்று கூறினர். பிறகு, இன்னுமொரு மாதம் என்று மே 17 வரை தொடர்ந்தார்கள். காலக்கெடு முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்றுவரை ஒருவழிப் பாதையாகவே உள்ளது. இதனால் வட்டார மக்கள் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்”, என சுரேஸ் தெரிவித்தார்.

ஒருவழிப் பாதையானதால், நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, அதிவேகமாக வாகனங்களைச் செலுத்துவதால் அடிக்கடி விபத்துகள் நேர்வதாகவும் வட்டார மக்கள் கூறினர். இதனால், அச்சாலையில் அமைந்துள்ள பிரிஞ்சாங் சீனப்பள்ளி மாணவர்களும் சாலையைப் பயன்படுத்த சிரமப்படுகின்றனர். மேலும், தங்கள் வியாபாரமும் குறைந்துள்ளதாக அவர்களில் ஒருசிலர் வருத்தப்பட்டனர்.

இன்று காலை, ஏ.எஸ்.பி. மொக்தார் டின், கேமரன் மலை மாவட்டப் போலீஸ் தலைவரின் பிராந்திய மேலாண்மை பிரிவு நடப்பு தலைவர்,  அனுவார் முகமட் அஸ்லான், கேமரன் மலை பொதுப்பணித்துறை பொறியியலாளர் மற்றும் கேமரன் மலை மாவட்ட மன்ற மேலாண்மை துறை பொறுப்பாளர் ஆகியோர் அக்கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்டனர். ஆனால், மேலதிகாரிகள் இல்லை எனும் காரணத்தோடு, அவர்கள் இது தொடர்பாக கருத்துரைக்க மறுத்துவிட்டனர்.

IMG-20170621-WA0042பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அனுவார், பிரின்ஞாங் ஒருவழிப் பாதை நிர்மாணிப்பு இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது என்றும், மேலும் கருத்துரைக்கும் முன் இன்று கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவைப் படிக்க வேண்டியுள்ளது எனவும் கூறினார்.

இந்த ஒருவழிப் பாதை நிர்மாணிப்பால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்த ஆய்வை, சுரேஸ் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்துவந்ததோடு, வட்டார மக்களிடையே கையெழுத்து வேட்டை நடத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்னும் 3 வாரங்களில் பழையபடி அச்சாலையை இருவழிப் பாதையாக மாற்றி அமைக்க வேண்டும் எனப் பொது மக்கள் சார்பில் ஊராட்சி மன்றப் பொறுப்பாளர்களைக் கேட்டுக் கொள்வதாக சுரேஸ்குமார் தெரிவித்தார்.