அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தொடர்ந்துள்ள 1எம்டிபி சொத்துகள் சம்பந்தப்பட்ட சிவில் வழக்கு மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டதல்ல என்று கோலாலம்பூரிலுள்ள அமெரிக்க தூதரகம் கூறுகிறது.
“இல்லை, இது மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி அல்ல.
“சொத்துகளைத் திரும்பப்பெற்று அவற்றை பாதிக்கப்பட்ட நாட்டின் மக்களிடம் திருப்பிக் கொடுப்பது இதன் நோக்கம்”, என்று அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் மலேசியகினியிடம் கூறினார்.
அமெரிக்கச் சந்தைகள் மற்றும் நிதி அமைவுமுறைகள் ஆகியவற்றை பணச் சலவை செய்பவர்களிடமிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளில் டிஒஜே மேற்கொண்டுள்ள வழக்கு ஓர் அங்கமாகும் என்பதை அப்பேச்சாளர் வழியுறுத்தினார்.
நேற்று, அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசா டிஒஜேயின் இந்த நடவடிக்கை முஸ்லிம் தலைமைத்துவத்தில் இயங்கம் மலேசிய அரசாங்கத்தை அடுத்த பொதுத் தேர்தலில் மாற்றுவதற்கான முன்னேற்பாடு என்று கூறியிருந்ததற்கு பதில் அளிக்கையில் அப்பேச்சாளர் இவ்வாறு கூறினார்.
டிஒஜேயின் இந்த நடவடிக்கை அதன் கொள்ளையராட்சி சொத்து மீட்பு முயற்சியின் (Kleptocracy Asset Recovery Initiative (KARI)) ஒரு பகுதியாகும் என்று அவர் மேலும் கூறினார்.
அவருக்கு அம்னோ, முஸ்லிம், இஸ்லாம் – இவைகள் எல்லாம் வாக்குகளைக் கொண்டு வரும் சொல் என அவர் எதிர்பார்க்கிறார். பாவம்! மகிழ்ச்சியாய் இருக்கட்டுமே!