காதுகொடுத்துக் கேட்டல், ஆராய்தல், தீர்வு காணுதல்- இம் மூன்று அணுகுமுறைகளைப் பயன்படுத்தி பாரிசான் நேசனல் (பிஎன்) எதிரணி வசமுள்ள செகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியைத் திரும்ப எடுத்துக்கொள்ளப் போகிறதாம்.
அந்த அணுகுமுறைகள் மக்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும்; வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறும் என செகாம்புட் மசீச தொகுதித் தலைவர் டேனியல் லிங் சியா சின் கூறினார்.
“கடந்த ஆண்டிலிருந்து இம்மூன்று அணுகுமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறோம். அதாவது காதுகொடுத்துக் கேட்பது, ஆராய்வது, மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது……அதன் விளைவாக வாக்காளர்கள், குறிப்பாக சீன வாக்காளர்கள் பிஎன்னை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.
“இரண்டு தவணைகளாக எதிரணியிடம் இத்தொகுதி இருந்து வந்துள்ளது. ஆனால், அவர்களால் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை”, என்றாரவர்.