எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன் குறுகிய தோல்வி காணும் பட்சத்தில் தேர்தல் முடிவு செல்லாது என்று அறிவிக்கப்படலாம் என்று நினைக்கிறார் பார்டி பிரிபூமி பெர்சத்து தலைவர் (பெர்சத்து) டாக்டர் மகாதிர் முகம்மட்.
“அப்படிச் செய்ய அரசாங்கத்துக்கு ஆதாரம் எதுவும் தேவையில்லை. பிஎன்னில் உள்ள முரடர்கள் நிலைத்தன்மையைக் குலைக்க தயாராக இருப்பார்கள்.
“அந்த அடிப்படையில் அவசரகாலம் பிரகடனப்படுத்தப்பட்டு நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்படும்”, என்று மகாதிர் தம் வலைப்பதிவில் கூறினார்.
“நாடாளுமன்றம் நீக்கப்பட்டால், 1969-இல் இனக் கலவரங்களுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட தேசிய நடவடிக்கை மன்றம் (மகேரான்) போன்ற ஒன்று அமைக்கப்பட்டு இராணுவ ஆட்சிமுறை நடக்கும்”.
நாட்டில் நிச்சமற்ற நிலை நிலவும் அந்நேரத்தில், பிஎன் மற்ற கட்சிகளின் எம்பிகளைத் தன் பக்கமாக இழுக்கப் பார்க்கும் என மகாதிர் கூறினார்.
“போதுமான பெரும்பான்மை வந்ததும் அவசரகாலம் அகற்றப்பட்டு பிஎன் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கும். நாடாளுமன்றம் மீண்டும் செயல்படத் தொடங்கும்”, என்றார்.
காக்காத்திமிர் சொல்வது உண்மை தான்– நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஐயா , இந்த நிலைமைக்கு நீங்களே மூலக்காரணம் எனலாம் . இஸ்லாம் , பூமிபுத்ரா சலுகை என்னும் பேரில் அவர்களுக்கு சோம்பேறித்தனத்தையும் , இலஞ்சம் என்ற அர்த்தத்தை சொல்லிக்கொடுத்து, சீனர் , இந்தியர் என எங்களை பால்படுத்தியவர் நீங்களே, உலகமே தற்போது மலேசியாவில் மூன்று இனம் வாழ்கிறது அவற்றுள் சீனர் , இந்தியர் , பங்ஸ்சா ரஸுவா (bansa rasuah ) என மலாய் இனத்தை குறிப்பிடும் அளவிற்கு வழிவகுத்தவர் நீங்களே முழு பொறுப்பாகும் . அதனை சரி செய்வது மிகக்கடினம் என்பது உலகம் அறிந்த உண்மை . மலேசியாவை இறைவன் ஒருவன் மூலமாகவே காப்பாற்றமுடியும் .
இதை இந்த மகாதிமிர் சொல்வதாக எவரும் நினைக்க வேண்டாம். அவரது சொந்த அனுபவம் பேசுகிறது. 1985ல் சபா மாநில தேர்தலில், ஜோசப் பயிரின் கிட்டின்கானின் எதிர்க்கட்சி வாகை சூடியது. அந்த கட்சி, மாநில ஆளுநரிடம் சென்று சத்திய பிரமாணம் எடுக்கவிடாமல், இரண்டு நாட்களாக தடுத்து வைத்தவரே இந்த மகாதிமிர்தான். அதன் பின்னர் அந்த எதிர்கட்சியிலுள்ள சில சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி, தனது பாரிசானை ஆட்சி பீடத்தில் அங்கே அமர்த்தியவாறே இந்த மகாதிமிர்தான். இவர் செய்ததை அல்தான்துயா நஜிப் செய்துவிடுவாரோ என்ற பயம். இவர் சொல்லிக் கொடுத்த பாடம்தானே!
பதவியில் இருந்து சிறுக சிறுக இந்தியர்களின் வாழ்க்கையை கெடுத்தவர் இந்த மகாதீர். மே பதின்மூன்றுக்கு மூல காரணமே இவர்தான். நமது முதல் பிரதமர் தூங்கு அப்துல் ரஹ்மானை பதவியில் இருந்து அகற்ற முனைந்தவரே இந்த நரிதான். இந்தியா பாக்கிஸ்தான் கார்கில் போரில் பாகிஸ்தானுக்கு ஆயுதம் அனுப்பியவர் இந்த மகதிர்தான். கேட்டுவாணன் மெலாயு என்று ஆரம்பித்து, அரசாங்கத்தில் மற்ற இனங்கள், மேல் பதவிக்கு போகாமல் செய்தவர் இந்த மகாதீர். இப்பொழுது உள்ள பிரதமர் நஜிப்பை பலர் குறை கூறுகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை நஜிப் இந்தியர்களுக்கு ஓரளவு நல்லதை செய்துள்ளார். அரசாங்கத்தில் மற்ற இனங்கள் மேல் பதவிக்கு செல்ல, மாற்றங்கள் அமைத்தவர் இந்த நஜிப். மகாதிருக்கு ஏன் நஜிப்பை பிடிக்கவில்லை தெரியுமா? காரணம், பூமிபுத்ராவை விட மற்ற இனங்களுக்கு நஜிப் நன்கு உதவி பண்ணியுள்ளார். உதாரணம், ப்ளூ பிரிண்ட் திட்டதை இந்தியர்களுக்கு உருவாக்கியவர். இதன் மூலம் நமது மாஇக
தலைவர்கள் ஆதாயம் தேடாமல் இந்தியர்களுக்கு உதவ வேண்டும். பூமிபுத்ராக்களுக்கு இன்னும் உதவி செய்ய மகாதீர் மற்றுமொரு அம்மனோ கட்சியை உருவாக்கியுள்ளார் (பெர்சட்டு) . . .
செல்வம் 5179 நீங்கள் சொல்வது உண்மையிலும் பெரிய உண்மை. அதை பற்றியெல்லாம் சீர்தூக்கி பார்த்து சிந்தித்து செயல்பட தமிழனுக்கு நேரமில்லையா அல்லது மூளை இல்லையா என்பது எனக்கும் தெரியவில்லை.
ஐயா singam /selvam அவர்களே நீங்கள் சொல்வது எல்லாமே உண்மைதான் –ஆனால் நம்மில் எத்தனை பேர் இது பற்றி அக்கறை கொண்டுள்ளனர் — எத்தனை பேர் இது பற்றியெல்லாம் அறிந்து கொள்ள முனை கின்றனர்? எத்தனை பேர் இன்னும் தங்களின் தலையை மண்ணில் வைத்திருக்கின்றனர்? எத்தனை பேர் எலும்பு துண்டுக்காக காத்திருக்கின்றனர்?
எதிர் வரும் பொதுத் தேர்தலில் என்ன நடக்கும் என்று இவர் சொல்ல வில்லை ! என்ன நடக்க வேண்டும் என்றும் ! மற்ற இனங்களை எப்படி அடக்க வேண்டும் என்றும் கோடி காட்டுகிறார் ! 1969 ல் இவர்கள் தூண்டி விட்ட இன கலவரத்தை மீண்டும் அரங்கேற்ற தூபம் போடுகிறார்கள் ! விழித்துக்கொள்ளுங்கள் நம் மக்களே ! இவரை போன்ற இனவாதியும் ! சுயநல வாதியும் ! ஓரம் கட்ட படவேண்டும் என்றால் ! நஜிப் அவர்களே நமது தேர்வாக இருக்கட்டும் !! நமது உரிமைகளுக்கு குறள் கொடுப்போம் ! நாடு என்ன செய்தது ! அரசாங்கம் என்ன செய்தது ! என்பதை நிறுத்துவோம் ! நமது கடமையை ஆற்றுவோம் ! உரிமையை கேட்ப்போம் !!
நண்பர் s .maniam அவர்களே! மகாதிமிர் வில்லன் என்றால், இந்த நஜிப் வில்லாதி வில்லன். மலைப்பாம்பிடம் (மகாதிமிர்) தப்பி, முதலை (நஜிப்) வாயினுள் சிக்கிக் கொண்டுள்ளோம். எதிர்வரும் பொதுத்தேதலில் எந்தக் கட்சி என்று பார்க்காதீர்கள் . போட்டியிடுபவர்களில் எவர் சிறந்தவர், மக்கள் நலன் பேணுபவர், ‘சுருட்டிக்’ கொள்ளாதவர், ஊழல் புரியாதவர், என்று பார்த்து, அவருக்கு ஒட்டு போடுங்கள். (மேலே சொன்ன தகுதிகள் எவருக்கும் இல்லையென்றால், ஒட்டுப் போட போகாமல், வீட்டிலிருந்தவாறே தலையை பிய்த்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை)
Mr .s .maniam ! “1969ல் இவர்கள் தூண்டிவிட்ட இனக்கலவரத்தை மீண்டும் அரங்கேற்ற தூபம் போடுகிறார்கள். ஆகவே, விழித்துக் கொள்ளுங்கள், நஜிப் அவர்களே நமது தேர்வாக இருக்கட்டும்.” என்கிறீர்களே, ஐயா, இப்போதுதான் தூங்கி எழுந்து வருகிறீர்களா? 1969ல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் கதாநாயகனே, நஜிப்பின் தந்தை துன் அப்துல் ரசாக் அவர்கள் தானே! பாம்பின் கால் பாம்பறியும். தந்தையைப் போல் தான் தனயன்.
s . maniam அவர்களின் கருத்துக்கள் யாவும் உண்மை , ஆனால் அதைப்பற்றியெல்லாம் சிந்திக்க நம் தலைவர்களுக்கு நேரமில்லை .