மஇகா – கோரப்படாத 2,575 குடியுரிமை பிரச்சனைகளை முதலில் தீர்க்க வேண்டும்!

Slide3சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், உள்துறை அமைச்சு ஒப்புதல் வழங்கியும் இன்னும் நிலுவையில் இருக்கும் 2575 குடியுரிமை பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்படி மஇகா-வைக் கேட்டுக்கொண்டார்.

இவர்களில் சிலரின் விண்ணப்பங்களுக்குப் புத்ராஜெயா, தேசியப் பதிவு இலாகாவின் ஒப்புதல் கிடைத்துவிட்ட நிலையில், மாவட்டப் பதிவு இலாகாவிலிருந்து இன்னும் கடிதம் வராததால் விண்ணப்பத்தாரர்கள் கவலை அடைந்துள்ளனர்.

“மஇ கா இந்த ‘மெகா மை டஃப்தார்’ பிரச்சாரத்திற்காக, இந்திய சமூகப்-பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு (செட்டிக்) வழி பெறப்பட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இந்த 2575 விண்ணப்பத்தாரர்களின் தகவல்களையும் பெற வேண்டும். அதன் மூலம், அவர்களை நேரிடையாகத் தொடர்பு கொண்டு, இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வுகாண வேண்டும்.  தற்போது, மஇகா நாடு முழுக்  இந்த மை டஃப்தார் பிரச்சாரத்தில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருவதால், இது சிரமமான ஒன்றல்ல,” என மலேசிய Slide1சோசலிசக் கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினருமான டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

“ஒருவேளை அவர்களால் இந்த 2575 விண்ணப்பத்தாரர்களையும் அடையாளம் காணமுடியவில்லை என்றால், இந்த ‘மெகா மை டஃப்தார்’ இயக்கத்தால் பலனேதும் இல்லை என்றே அர்த்தம். 14-வது பொதுத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், ஓட்டுகளைப் பிடிக்க பாரிசான் உறுப்புக் கட்சிகள் மேற்கொள்ளும் அரசியல் நாடகங்களில் இதுவும் ஒரு காட்சியாகிவிடும்”, என அவர் கூறினார்.

இது தொடர்பாக மேலும் கருத்துரைக்கையில், “விண்ணப்பத்தாரர்களுக்கு அனுப்பும் கடிதத்தின் நகலை, மாநிலப் பதிவு இலாகா அலுவலகத்திற்கும் அனுப்ப வேண்டுமென, தேசியப் பதிவு இலாகாவையும் உள்துறை அமைச்சையும் மஇகா கேட்டுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, தேசியப் பதிவு இலாகா மற்றும் உள்துறை அமைச்சின் இணையத்தளங்களில் ஒரு சிறப்பு பகுதியை drkஉருவாக்கி, அதில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பதைத் தெரியப்படுத்தினால், விண்ணப்பத்தாரர்களுக்கும் அவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கும் சுலபமாக இருக்கும். இதன்வழி, குடியுரிமைப் பிரச்சனைகளைச் சுமூகமாகவும் விரைவாகவும் தீர்க்க முடியும்”, எனவும் அவர் ஆலோசனை வழங்கினார்.

குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்பவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருமானம் பெறும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். குடியுரிமை இல்லாததால், இவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு பெறுவது மற்றும் தங்கள் குழந்தைகளுக்குப் பிறப்பு பத்திரம் பதிவு உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே, மஇகா இப்பிரச்சனையைக் களைய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் டாக்டர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, இந்த ‘மெகா மை டஃப்தார்’ பிரச்சாரத்தின் வாயிலாக, முறையான ஆவணங்கள் இல்லாத 2,500 பேரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக மஇகா தேசியத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் Slide2தெரிவித்தார்.

“முறையான ஆவணங்கள் இல்லாததால், இவர்கள் குடியுரிமை பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அவர்களுக்கு உதவ, இந்தியர் செயல்முறை சிறப்புப் பணிக்குழு தேசியப் பதிவு இலாகாவுடன் இணைந்து செயல்பட ஆயத்தமாக உள்ளது. ஒருவரின் ஆவணத்தைச்  சேகரிக்க குறைந்தது 3 மாத காலம் வரை ஆகலாம்”, எனவும் அப்பணிக்குழுவின் தலைவருமான டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

கடந்த ஜூன் 5 ஆ ம் தேதி தொடங்கப்பட்ட இந்த மெகாப் பிரச்சாரம், ஜூன் 22-ம் தேதியுடன்  நிறைவுபெறுவது குறிப்பிடத்தக்கது.