அன்னிய செலாவணி(ஃபோரெக்ஸ்) இழப்பு குறித்து இப்போது விசாரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுவது குறித்துக் கருத்துரைத்த முகைதின் யாசின், இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இருபதாண்டுகளுக்குமேல் மெளனமாக இருந்தது ஏன் என்று வினவுகிறார்.
நஜிப் அவ்விவகாரத்தில் நடந்தது என்னவென்பதை அறிய விரும்பியிருந்தால் அவர் மகாதிர் முகம்மட் அமைச்சரவையில் இருந்தபோதே அது குறித்துக் கேட்டிருக்க வேண்டும் என பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் கூறினார்.
“அமைச்சரவையில் இல்லை என்றால் அம்னோ உச்சமன்றக் கூட்டத்திலாவது நஜிப் அவ்விவகாரத்தை எழுப்பியிருக்கலாம்”, என முகைதின் ஓர் அறிக்கையில் கூறினார்.
மகாதிர் 1எம்டிபி விவகாரம் தொடர்பில் நஜிப்பைக் குறைகூறத் தொடங்கிய பின்னர்தான் ஃபோரெக்ஸ் ஊழல் மீது அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதை முகைதின் சுட்டிக்காட்டினார்.
“இந்த (ஃபோரெக்ஸ்) விவகாரம் குறித்துத்தான் முன்பே விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களும் பணிவிலகிச் சென்று விட்டார்களே. மனத்தில் என்ன வஞ்சத்தை வைத்துக்கொண்டு நஜிப் இந்த ஆர்சிஐ-யை அமைத்திருக்கிறார்?”, என்றவர் வினவினார்.
1எம்டிபி ஊழலிலிருந்து கவனத்தைத் திருப்பவே ஃபோரெக்ஸ் மீது ஆர்சிஐ அமைக்கப்பட்டிருப்பதாக பெர்சத்து தலைவர் உறுதியாக நம்புகிறார்.
அவர் திருடும்போது நான் கண்டுகொள்ளவில்லை ! நான் திருடும்போது மட்டும் ஏன் என்னை சொறிகிறீர்கள் ? பிறகு, புண்ணாகும்வரை உங்களனைவரையும் சொறிந்துவிடுவேன் என்று காரியத்தில் இறங்கிவிட்டார் , ” பந்தா ராணியின் ” பதி . சொறிய சொறிய என்னென்னவெல்லாம் வெளிவரப்போகிறது என்று வேடிக்கைப் பார்க்கவேண்டியதுதான் .
அப்போதே அவர் மௌனம் கலந்திருந்தால் இப்போது நீங்கள் இந்தக் கேள்வியை கேட்டிருக்க முடியாதே! இவ்வளவு நாள் உங்களுக்குகாகத்தான் காத்திருந்தார் என்று எடுத்துக் கொள்ளுங்களேன்!
மொஹிடின், இருபது ஆண்டுகளாக ஏன் ட.ஸ்ரீ நஜிப் மெளனமாகயிருந்தார் என கேள்வி கேட்க்கும் மொஹிடிம், ஏன் அவர் கேட்க வில்லே….
வணக்கம் . இருபது ஆண்டுகள் ஏன் மவுனம் காத்தார் என வினவும் நீங்கள், திரு நஜிப்புடன் தாங்கள் துணைப்பிரதமராக இருந்த சமயத்தில் நீங்கள் ஏன் மவுனம் காத்தீர்கள் என்பதனை தெளிவுபடுத்தமுடியுமா ? கல்வி அமைச்சராக இருந்தகாலத்தில் ‘புது கல்வி கட்டமைப்பு முறை’ என்ற முறையில் பல கோடி பணத்தை விரையம் செய்தது ஞாபகம் இருக்கிறதா? இனவெறியின் காரணமாக உலக தகவல்களை அகற்றி, உள்ளூர் மலாய் தலைவர்களின் தகவல்களை கொண்டு உருப்பெற்ற சரித்திட புத்தகம் ஒன்றை ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு வழங்கி அதனை படித்து, தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும், இல்லையேல் தோல்வி என மாற்றத்தை வரைந்தவர் அனைவரும் அறிவோம் , அதுமற்றுமின்றி, தமிழ் சீனம் பள்ளிகளின் தேசியமொழி தேர்ச்சி விகிதம் போதவில்லை என கூறி, மலாய் ஆசியர்களை உட்புகுத்தியவர்கள் நீங்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம் . உள்நோக்கமாக நீங்கள் செய்த பலவிஷியங்கள், சம்பவங்கள், கல்வி அமைச்சர் என்ற போர்வையில் தமிழர் சீனர் எங்களை உதாசீனம் படுத்தியது இன்னும் நாங்கள் மறக்கவில்லை , குறிப்பாக ‘இன்டெர்லோக்’ என்ற புத்தகம் வெளிவந்த வேலையில் நீங்கள் விளையாடிய சேட்டைகளை நாங்கள் மறுப்பதற்கில்லை . எங்களின் மனவேதனையும் , சாபமும் தங்களை தற்போது ஆட்கொள்கிறது .