பக்கத்தான் ஹரப்பான் தலைமையிலான ஒரு மத்திய அரசு பொருள்கள் மற்றும் சேவைகள் வரியை (ஜிஎஸ்டி) அகற்ற முடியும். அதே வேளையில், பிரிம் ரொக்க நிதி உதவியை அளிக்க முடியும் என்பதோடு உபரி வரவு செலவுதிட்டத்தை அளிக்க முடியும் என்று பினாங்கு முதலைமைச்சர் லிம் குவான் எங் நம்புகிறார்.
ஜிஎஸ்டியை அமல்படுத்தாமலும்கூட, நாம் உபரி பட்ஜெட்டை அடையமுடியும் என்பதோடு பிரிம் தொகையை ஒவ்வொரு ஆண்டும் வழங்க முடியும் என்றாரவர்.
ஹரப்பான் தலைமையிலான பினாங்கு அரசின் வெற்றிகளைப் பாருங்கள். ஜிஎஸ்டி விதிக்காமல், பட்ஜெட் உபரியை சீராக அடைந்து வருகிறது என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறுகிறார்.
உங்கள் மாமிலத்திலுள்ள பள்ளிகளில் நடக்கும் குண்டர்த்தனத்தை முதலில் ஒடுக்கப் பாருங்கள். மற்றதை பிறகு பார்க்கலாம். ‘நவீன்’களை கொன்று குவித்த பிறகு, பெட்டி நிறைய பணம் இருந்தும் என்ன பயன்.
அருமை சிங்கம்,
நம் வீட்டு பூ தொட்டில் உள்ள பூ செடி வாடியதற்கு அந்த பூ செடி விற்றவர்தான் காரணம். தரமான விதை கொடுத்திருந்தால், நீர் ( குடும்ப சூழல் ), நிலம் (அடிப்படை வாழ்வியல் கல்வி), தரமான உரம் ( மனோபக்குவம் + புரிந்துணர்வு ), காற்று (கர்மா ) மற்றும் பூச்சி / விஷ ஜந்துக்கள் ( நண்பர்கள் + உறவினர்கள் + பள்ளிகூடம் செயல்முறை ) இவற்றில் எந்த குறை இருந்தாலும் சமாளித்து வந்திருப்பான்????
அரைத்த மாவையே அறைப்போமா ………( பத்தோடு பதினொன்னு.. அத்தோடு நாவினும் ஒன்னு… அடுத்து யாறு??)
என் தனிப்பட்ட கருத்து . தவற்றிற்கு வருந்துகிறேன் .