1எம்டிபி சொத்துகள் சம்பந்தமாக அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) வழக்கு தாக்கல் செய்துள்ளதால், மலேசிய சட்டத்துறை தலைவர் அபாண்டி அலி 1எம்டிபி விசாரணையை மீண்டும் தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் விடுத்திருந்த கோரிக்கையை ஏஜி அபாண்டி நிராகரித்து விட்டார்.
மலேசிய வழக்குரைஞர்கள் மன்றத்தின் நிலைப்பாட்டில் அர்த்தம் ஏதும் இல்லை. அப்படியான நிலையில் நான் என்ன மற்றம் எப்படி கருத்து தெரிவிப்பது. அவர்கள் கேட்டுக்கொண்டதில் அர்த்தம் இல்லை என்று கூறிய ஏஜி அபாண்டி வேறு எந்த விளக்கமும் அளிக்க வில்லை.
நேற்று, மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் தலைவர் ஜோர்ஜ் வர்கீஸ் சட்டத்துறை தலைவர் அபாண்டி 1எம்டிபி மீதான விசாரணை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த பண்டிக்கு -உண்மையான பண்டிகள் மன்னிக்கவும் – நம்பிக்கை நாயகனிடம் இருந்து ஏதாவது எலும்பு துண்டு கிடைக்குமே– இங்குதான் இவனே ராஜா இவனே மந்திரி — அதிகாரம் கையில் இருப்பதால் நியாயத்திற்கு ஏன் மதிப்பு கொடுக்க வேண்டும்?
சட்ட துறை தலைவர் என்பதுக்கு அர்த்தம் புரியாத இவருக்கு பணம் இருந்தாலே போதுமானது , நியாயம் நீதி நேர்மை என்பது புரியாது இலஞ்சத்தை தவிர . பதவியும் அதற்கு ஏற்ற அரவணைப்பும் , பாதுகாப்பும் இருந்தால் போதுமானது என இவரை என் முதல் கொண்டு பலபேர் மதிப்பது இல்லை . எந்த நாட்டிலும் காவல் துறையும் , சட்டத்துறையும் நேர்மையை கடைபிடிக்க தவறினால் , அந்த நாடும் , மக்களும் சுபேசமாக வாழ்ந்திட முடிவதில்லை , அதற்கு உதாரணம் நம்நாடு மலேஷியா .