10 நாடுகள் குடியுரிமை கொடுக்க முன்வந்துள்ளனவாம்: ஜாகிர் நாய்க் கூறிக்கொள்கிறார்

zakirrசர்ச்சைக்குரிய   இஸ்லாமிய   சமயப்   பிரச்சாரகர்   ஜாகிர்   நாய்க்   தமக்கு  பத்து   நாடுகள்    குடியுரிமை  வழங்க   முன்வந்திருப்பதாகக்    கூறுகிறார்.

ஆனால்,    அவற்றில்     எதையும்    ஏற்றுக்கொள்வது      குறித்து      அவர்    இன்னும்     முடிவு     செய்யவில்லை.   அவரது    நாடான   இந்தியாவில்   பயங்கரவாதம்,  பணச்   சலவை    முதலிய    நடவடிக்கைகளில்    ஈடுபட்டதாகக்    குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்       ஜாகிர்.

“(இந்தியாவில்)   அடிப்படையற்ற   குற்றச்ச்சாட்டுகளை     எதிர்நோக்கும்    நான்    வேறொரு   நாட்டின்    குடியுரிமையை    ஏற்பது     குறித்து  இன்னும்    முடிவு    செய்யவில்லை.

“ஒருவேளை   எதிர்காலத்தில்    நான்   ஏற்றுக்கொள்ளக்   கூடும்.   என்    கருத்துகளுக்காக     என்மீது    வழக்கு    தொடுக்கப்படும்போது    நானும்   என்னைப்    பாதுகாத்துக்கொள்ள    வேண்டியுள்ளது”,  என்றவர்   சவூதி   அராபிய    ஊடகமொன்றில்   கூறியதாக      புது டில்லியிலிருந்து    செயல்படும்  த   இந்து   நாளேடு     தெரிவித்தது.