நீதிமன்ற வெற்றிக்குப்பின் தாவ்யிச கோவில் நிரந்தரத் தீர்வை நாடுகிறது

 

Taoisttemplevictory1கோவில் உடைப்புக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைத் தொடர்ந்து ஒரு தாவ்யிச கோவில், அதிகாரிகளுடனும் கோவிலை உடைக்கும் முயற்சியை மேற்கொண்ட நில மேம்பாட்டாளருடனும் கலந்துரையாடல் நடத்தி ஒரு நிரந்தரத் தீர்வைக் காண  விரும்புகிறது.

“மலேசியாவில் சமய சுதந்திரத்திற்கு இது ஒரு முக்கியமான தீர்ப்பு.

“ஆனால், நாங்கள் இந்த விவகாரத்தை மேலும் நில மேம்பாட்டாளருடன் விவாதிக்க விரும்புகிறோம். ஒரு புதிய கோவிலுக்கான மாற்று நிலம் கோவிலுக்கு கொடுக்கப்பட வேண்டும்”, என்று ஹோக் சுய் தோங் கோவிலை நீதிமன்றத்தில் பிரதிநிதித்த வழக்குரைஞர் பி. உதயகுமார் கூறினார்.

தற்போது, அந்தக் கோவில் கெப்போங் டிவிலப்மெண்ட் செண்ட். பெர்ஹாட்டிற்குச் சொந்தமான நிலத்தில் இருக்கிறது. முன்பு, Taoisttemplevictory3அக்கோவிலை இடமாற்றம் செய்வதற்கு கோவில் குழு ஓர் ஏக்கர் நிலம் கேட்டிருந்தது.

இவ்விவகாரம் குறித்து பேசுவதற்காக நில மேம்பாட்டாளர், மாநகர்மன்ற முஸ்லிம்-அல்லாதார் வழிபாட்டு பணிப்படை (Ribi) மற்றும் மேயர் அமின் நோர்டின் அப்துல் அசிஸ் ஆகியோருடன் ஒரு சந்திப்பு நடத்த தானும், கோவில் குழுவும் விரும்புவதாக உதயகுமார் மேலும் கூறினார்.