1எம்டிபி சம்பந்தப்பட்ட நிதியிலிருந்து களவாடப்பட்ட பணத்திலிருந்து மலேசிய ஜோ லோ ஆஸ்திரேலிய மோடல் மிரண்டா கெர்ருக்கு கொடுத்த யுஎஸ்$8.1 மில்லியன் (ரிம35 மில்லியன்) மதிப்புள்ள நகைகளை கெர் அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) யிடம் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
“விசாரணை தொடங்கப்பட்டதிலிருந்து, கெர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததுடன் பரிசாகக் கொடுக்கப்பட்ட நகைகளை அரசாங்கத்திடம் கொடுப்பதற்கு வாக்குறுதி அளித்தார்.
“கெர் விசாரணைக்கு எவ்வகையிலும் தொடர்ந்து உதவுவார்”, என்று அவரின் பேச்சாளர் தெரிவித்ததாக வால் ஸ்டிரிட் ஜெர்னல் (WSJ) செய்தி கூறுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை, லோஸ் எஞ்ஜிலிஸ்லுள்ள தமது வைப்புக் காப்பிட பெட்டியிலிருந்து கெர் அந்த பரிசுப் பொருள்களை அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக அப்பேச்சாளர் கூறினார்.
டிஒஜே தாக்கல் செய்திருந்த 1எம்டிபி சொத்து சம்பந்தப்பட பறிமுதல் வழக்கில் ஜோ லோ 1எம்டிபியிலிருந்து களவாடிய பணத்திலிருந்து வாங்கிய நகைகளை கெர்ருக்கு பரிசாக கொடுத்ததாக கூறப்பட்டிருந்தது.
இந்த மிக அண்மையச் சம்பவம் குறித்து டிஒஜே கருத்துக் கூற மறுத்து விட்டது, ஏனென்றால் இந்த வழக்கில் கெர் ஒரு பிரதிவாதியல்ல என்று அது குறிப்பிட்டுள்ளது.
இந்த நாட்டு “ராணி” கொடுப்பாளா? சிங்கப்பூரில் எத்தனை பேர் தண்டிக்கப்ப்ட்டுள்ளனர்– இங்கு ஏன் ஒன்றுமே இல்லை? எல்லாம் நம்பிக்கை நாயகனின் திருவிளையாடல்.