“இப்போது, எம்ஒ1-னின் மனைவி நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்”, கிட் சியாங்

 

Whenwillmo1wifehandoverஅமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தாக்கல் செய்துள்ள சொத்துப் பறிமுதல் சிவில் வழக்கைத் தொடர்ந்து அமெரிக்க நடிகர் லெநார்டொ டிகாப்பிரியோ மற்றும் ஆஸ்திரேலிய மோடல் மிரண்டா கெர் ஆகியோர் டிஒஜே பட்டியலிட்டிருந்த சொத்துகளைத் திருப்பிக் கொடுத்து விட்டனர். இப்போது, மலேசியன் அதிகாரி1 இன் மனைவி அவ்வாறு செய்ய வேண்டும்.

வணிகர் ஜோ லோ அன்பளிப்பாக டிகாப்பிரியோவுக்கும் கெர்ருக்கும் கொடுத்த பல மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிசுகளை அவர்கள் டிஒஜேயிடம் திருப்பிக் கொடுத்து விட்டதைத் தொடர்ந்து, அனைவரின் பார்வையும் “எம்ஒ1-னின் மனைவி”யின் மீது விழுந்துள்ளது என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

டிஒஜே தாக்கல் செய்துள்ள மிக அண்மைய சிவில் வழக்கில் எம்ஒ1-னின் மனைவிக்காக யுஎஸ்$27.3 மில்லியன் மதிப்புடைய 28 வகையான நகைகள், 22 கேரட் இளஞ்சிவப்பு வைர நெக்லஸ் உட்பட, வாங்கப்பட்டதாக வர்ணிக்கப்பட்டுள்ளது.

டிஒஜே தாக்கல் செய்த முதல் 1எம்டிபி சம்பந்தப்பட்ட வழக்கைத் தொடர்ந்து, பிரதமர்துறையின் அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாலான் டிஒஜே ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள “எம்ஒ1” நஜிப்தான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அப்படியானால், தவறானமுறையில் பெறப்பட்ட பணத்திலிருந்து வாங்கியதாக கூறப்படும் பரிசுகளை ஜோ லோவிடமிருந்து பெற்றாரா என்பதை அவர் (எம்ஒ1-னின் மனைவி) உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று கிட் சியாங் கூறுகிறார்.

இறுதியாக, அவர் (எம்ஒ1-னின் மனைவி) அவ்வாறான பரிசுகளைப் பெற்றிருந்தால், அவர் டிகாப்பிரியோ மற்றும் கெர் ஆகியோரைப் பின்பற்றி அவற்றை டிஒஜே விசாரணையாளர்களிடம் ஒப்படைப்பாரா என்று கிட் சியாங் கேட்டுள்ளார்.