டிஏபி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பினாங்கில் கடலடி சுரங்கப் பாதை, மூன்று முக்கிய நெடுஞ்சாலைகள் ஆகிய திட்டங்களுக்காக ஸெனித் கட்டுமான நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட தொகை குறித்து முரண்பாடான தகவல்களைத் தெரிவித்திருப்பதாக பினாங்கு பிஎன் சட்டமன்ற உறுப்பினர் கூறுகிறார்.
அத்திட்டங்கள் தொடர்பில் செள கொன் இயோ கூறியிருப்பது அதே விவகாரம் தொடர்பில் சட்டமன்றத்தில் தன்னுடைய கேள்விக்கு லிம் ஹொக் செங் அளித்த பதிலிலிருந்து முரண்படுகிறது என அம்னோவின் புலாவ் பெத்தோங் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் பாரிட் சாஆட் கூறினார்.
“செள-வின் கூற்று சரியா, தப்பா என்பதை ஹொக் செங் விளக்க வேண்டும், அல்லது அவர் (ஹொக் செங்) சொன்னதுதான் சரியா?”, என்று முகம்மட் பாரிட் ஓர் அறிக்கையில் வினவினார்.
“செள-வின் கூற்றுத்தான் சரி என்றால், ஹொக் செங் தவறான தகவலைத் தந்துள்ளார் என்றாகிறது.
“மாநிலச் சட்டமன்றத்தில் தவறான தகவல் தந்த அவருக்கு (ஹொக் செங்) எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”, என்றாரவர்.