போரெக்ஸ் இழப்பு பிஎன்எம்-இன் அன்னிய நாணயக் கையிருப்பைப் ‘பெரிதும் பாதித்து விட்டது’

bnm1990களில்   பேங்க்   நெகாராவுக்கு   ஏற்பட்ட  யுஎஸ்$10பில்லியன்    அன்னிய    செலாவணி  இழப்பு    அதன்   இன்றைய    அன்னிய    செலாவணிக்  கையிருப்பைப்    பெரிதும்    பாதித்து    விட்டதென   மத்திய    வங்கியின்   முன்னாள்    உதவி   கவர்னர்    அப்துல்   முராட்    காலிட்    கூறினார்.

அந்த   யுஎஸ்$10 பில்லியனை   அரசாங்கச்  சேமிப்புத்   திட்டங்களில்     போட்டு   வைத்திருந்தால்     இந்த   25  ஆண்டுகளில்   யுஎஸ்$26.66  பில்லியனாக    அல்லது   ரிம100  பில்லியனுக்கும்மேல்    உயர்ந்திருக்கும்  என   மூராட்   கூறினார்.

“அன்றைய   மொத்த   இழப்பு    யுஎஸ்$10 பில்லியன்.     அதன்  இன்றைய   மதிப்பு    சுமார்   ரிம40பில்லியன்”,  என்றவர்    கூறியதாக    த   நியு   ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்   கூறியுள்ளது.

இவ்வளவு   பெரிய   இழப்பை  விசாரிக்க    அரச  விசாரணை   ஆணையம்  (ஆர்சிஐ)   அமைப்பதுதான்   சரி   என்றாரவர்.