செப்டம்பரில் ‘anti-kleptocracy’ பேரணி: எதிரணி ஏற்பாடு செய்கிறது

azizah1எம்டிபி   விவகாரம்   தொடர்பில்      அமெரிக்க     நீதித்துறை   மேலும்   ஒரு   வழக்கைத்   தொடுத்துள்ள    வேளையில்     எதிர்க்கட்சிகள்   செப்டம்பர்   மாதத்தில்  பேரணி   ஒன்றை   நடத்தத்   திட்டமிடுகின்றன.

பேரணி “Sayang Malaysia, Hapuskan Kleptokrasi”(மலேசியாவை   நேசிப்போம்,  திருட்டுத்தனத்தை    அழிப்போம்)   என்ற    தலைப்பைக்   கொண்டிருக்கும்.  1எம்டிபி    விவகாரத்துக்கு    எதிரான    எதிர்க்கட்சிகளின்   எதிர்வினைகளை     ஒருங்கிணைக்க   அமைக்கப்பட்டிருக்கும்    1எம்டிபி  நடவடிக்கைக்  குழு   பேரணிக்கு    ஏற்பாடு    செய்யும்.

பேரணிக்கு   முன்னதாக    1எம்டிபி   விவகாரத்தை    மக்களுக்கு   விளக்கிச்   சொல்ல    நாடு   முழுவதும்   தொடர்   விளக்கக்     கூட்டங்கள்    நடத்தப்படும். முதல்   கூட்டம்   ஜூலை    6-இல்    பினாங்கு,    கப்பளா   பத்தாசில்   நடைபெறும்.

“சில   நேரங்களில்   மக்கள்    எம்டிபி   விவகாரம்  தங்கள்  வாழ்க்கையுடன்    தொடர்பு    கொண்டிருப்பதை    உணர்வதில்லை.  அதனால்   விளக்கக்   கூட்டங்கள்   வழியே   அவர்களை     அணுகப்   போகிறோம்”,  என   அந்நடவடிக்கைக்  குழுவின்   இடைக்காலத்   தலைவரான    எதிரணித்    தலைவர்    டாக்டர்   வான்   அசிசா    வான்   இஸ்மாயில்    கூறினார்.