கிட் சியாங்: அரசியலை மிகவும் சார்ந்துள்ள ஏஜி என்றால் அது அபாண்டிதான்

agஅமெரிக்க   நீதித்துறை (டிஓஜே)  ஆகக்  கடைசியாக   தொடுத்துள்ள   வழக்கை   “அரசியல்   நோக்கங்கொண்டது”   என்று    வகைப்படுத்தியுள்ள   சட்டத்துறைத்    தலைவர்    முகம்மட்   அபாண்டி   அலியை          “அரசியலை  மிகவும்    சார்ந்துள்ள   சட்டத்துறைத்   தலைவர்(ஏஜி)  என்று   டிஏபி   நாடாளுமன்றத்    தலைவர்    லிம்  கிட்  சியாங்   சாடினார்.

“அமெரிக்காவோ    அல்லது     வேறு   ஒரு     நாடோ     நம்   தேசிய   நலன்களுக்குக்   கேடு    செய்யக்கூடிய     வகையில்   நடவடிக்கை    எடுத்திருப்பது     ‘அரசியல்   நோக்கம்   கொண்ட’   செயலா   என்பதை     முடிவு   செய்ய   வேண்டியது    அமைச்சரவை   சட்டத்துறைத்   தலைவர்    அல்ல.

“அந்த   வகையில் ,  சட்டத்துறைத்  தலைவரான   அபாண்டி   அவருடைய    அதிகாரத்தை   மீறி விட்டார்”,  என  கிட்   சியாங்   ஓர்    அறிக்கையில்    கூறினார்.