ஆஸ்திரேலிய மாடல் அழகி மிராண்டா கெர், வைர நகைகளை அமெரிக்க நீதித்துறையிடம் ஒப்படைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார் அரசாங்கத்துக்குக்காக பரப்புரை செய்யும் சிறப்பு விவகாரத்துறை(ஜாசா)யைச் சேர்ந்த துன் பைசல் இஸ்மாயில் அசிஸ்.
ஜாசாவின் ஆலோசனை வாரிய உறுப்பினர்களில் ஒருவரான துன் பைசல், கெர் அந்நகைகளை ஜோ லவ்விடமே கொடுத்திருக்க வேண்டும் என்றார்.
ஏனென்றால், ஜோ லவ் 1எம்டிபி-இல் சுருட்டிய பணத்திலிருந்துதான் அந் நகைகளை வாங்கினார் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை.
“கெர் அந்நகைகளை ஜோ லவ்விடமே திருப்பிக் கொடுக்க நினைத்தால் அது தப்பல்ல. ஆனால், எதற்காக டிஓஜே-இடம் கொடுக்க வேண்டும்?”, என்றவர் வினவினார்.
டிஓஜே அதைப் பறிமுதல் செய்ய விரும்பினால் நீதிமன்ற ஆணையைப் பெற்றுப் பறிமுதல் செய்துகொள்ளட்டுமே என்றவர் முகநூலில் கூறினார்.
அவை ஜோ லாவ்’வின் உடமையாயின் அவற்றை அமெரிக்க நீதித்துறையிடமிருந்து அவர் பெற்றுக்கொள்ளலாமே . பெற்றுக்கொள்ள முன்வரவில்லையென்றால் , அதன் அர்த்தம் என்னவாக இருக்கும் ? என் அப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதைதான் !
ஆமாம்டா -திருடனிடமே திருட்டு பொருளை கொடு– மட முட்டாள்.