வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 422.5 கிலோ மீட்டரில் விரைவுப் பேருந்து ஒன்று தடம்புரண்டது விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயமுற்றார்.
அச்சம்பவம் காலை மணி 5க்கு நிகழ்ந்தது. அப்போது அப்பேருந்து 24 பயணிகளுடனும் இரண்டு ஓட்டுநர்களுடனும் பெர்லிஸ், கங்காரிலிருந்து ஜோகூர் பாரு நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
விபத்தில் உயரிழந்த இருவரில் ஒருவர் பேருந்து ஓட்டுநர் எம். அரசு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றவர் இந்தோனேசியரான ஒரு பயணி, மசினா, 46.
அவர்களின் உடல் கோலா குபு பாரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஹுலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பிரிண்டெண்டெண்ட் ஆர்.சுப்ரமணியம் கூறினார்.
படுகாயமடைந்த மற்றொரு பயணியான பாதிலா கொடிப் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
தொடக்கநிலை விசாரணைகளில் பஸ், ஓட்டுநர் மீது வேகமாக ஓட்டிச்சென்றது உள்பட மூன்று குற்றங்கள் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளதாக சுப்ரமணியம் கூறினார்.