புத்ராஜெயா – காணாமல் போன மில்லியன் ரிங்கிட் பெருமானமுள்ள ராடார் கருவி, நெதர்லாந்தில் உள்ளதைச் சுங்கத்துறை கண்டுபிடித்துள்ளது.
“காணாமல் போனதாகக் கூறப்பட்ட அந்த உயர் தொழில்நுட்ப இராணுவ உபகரணம், அதன் இலக்கான நெதர்லாந்து, ரோட்டடாம் துறைமுகத்தைச் சென்றடைந்துவிட்டதால், முந்தையச் செய்திகளைச் சுங்கத்துறை மறுக்க விரும்புகிறது,” எனச் சுங்கத்துறையின் இயக்குநர் ஜெனரல் சுப்ரமணியம் துளசி , ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.
ஆனால், ஜொகூர் தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகத்தில், ஒரு கொள்கலனில் இருந்த அந்த ராடார் கருவி, அங்கிருந்து எப்படி வெளியானது என்று அவர் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, ஆஸ்திரேலியாவிலிருந்து ஜொகூர் தஞ்சோங் பெலெபாஸ் வழியாக நெதர்லாந்து செல்லவிருந்த அந்த ராடார் கருவி, அனைத்துலக வாணிபம் மற்றும் தொழிற்துறை அமைச்சின் (மித்தி) முறையான போக்குவரத்து ஆவணங்களுக்காக காத்திருந்தபோது காணாமல் போனதாக ‘தி ஸ்தார்’ நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
இராணுவ உபகரணங்களுக்கான ‘மித்தி’யின் வியூக வணிகச் சட்டம் 2010-ன் கீழ், முறையான அனுமதியின்றி, அந்த ராடார் கருவி எப்படி அங்கிருந்து வெளியானது என்பது குறித்து சுங்கத்துறை விசாரணை செய்து வருவதாக து.சுப்ரமணியம் தெரிவித்தார்.
ஜொகூரிலிருந்து இருந்து காணாமல் போன ரேடார் கருவி, இப்போது எப்படி நெதெர்லாந்துக்கு போனது ? சுங்கத்துறையின் பாதுகாப்பில் ஓட்டை உள்ளது என்பது உறுதியாகிவிட்டதால் – ஆட்டை போட்டது யார் ? ஆகவே , அறிக்கை விடுவதை நிறுத்திக்கொண்டு ஆளை கண்டுபிடியுங்கள் !!
துளசி ஐயா , துளசி தீர்த்தத்தை நிதானமாக அருந்தி விட்டு தெளிவாக
ஊடகங்களுக்கு செய்தி தாருங்கள்.