புத்ரா ஜெயா வட கொரிய தொழிலாளர்களுக்கு வேலை அனுமதிகள் கொடுப்பதை நிறுத்தி விட்டதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்ததாக த ஜப்பான் டைம்ஸ் நேற்று அறிவித்தது.
கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜொங்-அன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜொங்- நாம் கொல்லப்பட்டு நான்கு மாதங்கள் ஆன நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மலேசியாவுக்கும் வட கொரியாவுக்குமிடையில் உறவுகள் நன்றாகத்தான் இருந்து வந்தன. ஆனால், கிம் ஜொங்- நாமின் கொலையில் வட கொரியர்கள் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக மலேசிய போலீஸ் குற்றஞ்சாட்டியதை அடுத்து உறவுகள் பாதிப்படைந்தன.