எல்லா உள்ளூர் விமான நிறுவன விமானங்களும் ஒரு தொழுகையுடன் பயணத்தைத் தொடங்குவது நல்லது என கூட்டரசுப் பிரதேச முப்தி சுல்கிப்ளி அல்-பக்ரி முன்மொழிந்துள்ளார்.
விமானப் பயணங்களில் தொழுகை நடத்துவது குறித்த சர்ச்சை குறித்துக் கருத்துரைத்த சுல்கிப்ளி, ஒரு பயணம் தொடங்கும்போது பயணம் சீராகவும் பாதுகாப்பாகவும் அமைய முஸ்லிம்கள் தொழுகை நடத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றார்.
இது ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒரு நல்ல பழக்கம்.
“அதனால், மலேசிய விமான நிறுவனங்களான மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் (எம்ஏபி), ஏர் ஏசியா, மலிண்டோ, பயர்பிளை ஆகியவை தொழுகையுடன் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்”, என்றாரவர்.
வேண்டுபவர் தொழுகட்டும்.
இறை வணக்கத்துடன் விமான பயணத்தை தொடங்கினால் ; பாதுகாப்பாக சேர வேண்டிய இடத்தில் நிச்சயமாக சேர்ந்து விடுவோம்
என்று உறுதி அளிக்கப்படுமாயின் எனக்கு எவ்வித அடச்சேபனையும்
இல்லை !!!