சுஹாகாம்: வழக்குரைஞர் சித்தி காசிம் மீது குற்றம் சுமத்துவது ஐநா கோட்பாடுகளுக்கு முரணானது

 

SitiKassimchargingagainstUnprincipleஒரு திருநங்கைகள் நிகழ்ச்சியின் போது திடீர் சோதனை மேற்கொண்ட கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய விவகாரங்கள் இலாகா (ஜாவி) அங்கு தமது சட்டப்பூர்வமான கடமையில் ஈடுபட்டிருந்த வழக்குரைஞர் சித்தி காசிம் மீது குற்றம் சுமத்தியிருப்பதை மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) கடுமையாகக் கண்டித்துள்ளது.

ஜாவி அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாக வழக்குரைஞர் சித்தி ஸாபெடா காசிம் மீது குற்றம் சுமத்தியிருப்பது குறித்து சுஹாகாம் அச்சமடைந்திருக்கிறது என்று அந்த ஆணையத்தின் தலைவர் ரஸாலி இஸ்மாயில் கூறினார்.

சித்தி அந்தச் சோசனையின் போது தாம் ஒரு வழக்குரைஞர் என்பதையும் தமது வாடிக்கையாளர்களுக்கு தமது கடைமையைச் செய்வதாக கூறிய பின்னரும் ஜாவி அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது என்றாரவர்.

தாங்கள் கைது செய்யப்படலாம், கிரிமினல் குற்றச்சாட்டு அல்லது அச்சுறுத்தல் போன்றவற்றுக்கு ஆளாகலாம் என்று வழக்குரைஞர்கள் அஞ்சினால், அவர்கள் மனித உரிமைகள் மீறலால் பாதிக்கப்பட்டவர்களை முறையாக தற்காக்க முடியாது என்றும் ரஸாலி கூறினார்.

சித்தி காசிம் எதிர்கொண்டுள்ள குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கோட்பாடுகளுக்கு முரணானதால், அக்குற்றச்சாட்டை கைவிடுமாறு ரஸாலி அரசாங்க அதிகாரிகளை வலியுறுட்திக் கேட்டுக்கொண்டார்.