மலேசியா ஒப்பந்தம் 1963 பற்றி ஆய்வு மேற்கொள்ள சரவாக் சட்டக் குழுவை லண்டனுக்கு அனுப்புகிறது

 

Sarawaklegalteamtolondonமலேசியா ஒப்பந்தம் 1963 இன் கீழ் சரவாக் மாநிலத்தின் உரிமைகள் சம்பந்தப்பட்ட சான்றாதாரங்களைத் தேடிக் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொள்வதற்கு சரவாக் வழக்குரைஞர்கள் அடங்கிய குழு ஒன்றை லண்டனுக்கு அனுப்புகிறது.

நேற்றிரவு, சிபுவில் பார்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து (பிபிபி) ஏற்பாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஒபெங் இதனைத் தெரிவித்தார்.

ஆனால், இக்குழு லண்டனுக்கு எப்போது செல்லும் என்பதையோ அங்கு எவ்வளவு காலத்திற்கு தங்கியிருக்கும் என்பதயோ அவர் வெளியிடவில்லை.

அவர் அளித்த தகவலின்படி, இக்குழு சட்டம், பெடரல் மாநில உறவுகள் மற்றும் திட்டங்கள் கண்காணிப்பு ஆகியவற்றுக்கான துணை அமைச்சர் ஷாரிபா ஹாசிடா சாயிட் அமான் கஸாலி தலைமையில் செயல்படும்.

“இது உண்மையிலேயே, மலேசியா ஒப்பந்தத்தில் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் உரிமைகளை மீண்டும் பெறுவதற்கு தோக் நான் (முன்னாள் முதலமைச்சர்) மேற்கொண்ட முயற்சிகளை தொடர்வதாகும்.

“அதற்காகத்தான் நாம் ஷாரிபா ஹசிடாவையும் சட்டக் குழுவையும் லண்டனுக்கு அனுப்பி சான்றாதாரங்களை பெறப் போகிறோம்”, என்று அபாங் ஜொஹாரி மேலும் கூறினார்.