மகாதிர்: யுகே-இல் மாணவர்கள் என்னைச் சந்தித்தது அரசாங்கத்துக்குப் பிடிக்கவில்லை

mahமுன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்   யுகே-இல்     தம்மைச்   சந்தித்த    மாணவர்களை    அரசாங்க     அதிகாரிகள்  கடிந்து  கொண்டதாகக்  கூறினார்.

மகாதிர்    தம்முடைய   வலைப்பதிவில்,   ஹரி  ராயாவின்போது   லண்டன்  சென்றது   குறித்தும்    அங்கு   ஏக்டன்   பள்ளிவாசலில்   நோன்புப்  பெருநாள்    தொழுகையில்    கலந்துகொண்டது   குறித்தும்    எழுதி  இருந்தார். மலேசிய   மாணவர்கள்   பலரும்   தொழுகைக்கு   வந்திருந்தனர்.

தொழுகைக்குப்   பின்னர்   மகாதிரும்    அவரின்   மனைவியார்     சித்தி   ஹஸ்மா   முகம்மட்     அலியும்    மாணவர்களைச்    சந்தித்தனர்.  அப்போதுதான்   அவர்   அதைக்  கவனித்தார்.

“மாணவர்களில்     எவரும்    மலேசிய    அரசியல்    நிலவரம்  குறித்து     கேட்காதது   ஆச்சரியமாக   இருந்தது.

“அவர்கள்  நட்பாகத்தான்  பேசினார்கள்   என்றாலும்   பயப்படுவதுபோல்     தெரிந்தது.

“பிறகுதான்   கேள்விப்பட்டேன்.   என்னைச்    சந்தித்த  மாணவர்களை   மலேசிய   அரசாங்கம்      கோபித்துக்கொண்டதாக”,  என்று   மகாதிர்   கூறினார்.

மாணவர்களுக்குத்   தங்களின்   உதவிச்  சம்பளம்    மீட்டுக்கொள்ளப்படலாம்    என்ற   அச்சம்.

“அதேவேளை    மாணவர்களை  என்  பக்கம்   இழுத்து  விடுவேனோ    என்ற  பயம்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்குக்கு”,   என்றாரவர்.

லண்டனில்   உள்ள   தம்   பிள்ளைகளும்  பேரப்  பிள்ளைகளும்    மலேசியாவுக்கு   வர  இயலாததால்   தாம்  ஹரி  ராயாவைக்    கொண்டாட   அங்கு    சென்றதாகா   மகாதிர்   கூறினார்.