டிஏபி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க சூழ்ச்சியா? பிரதமரின் உதவியாளர் கூற்று உறுதிப்படுவதாக லியு கூறுகிறார்

liewபிரதமர்    நஜிப்   அப்துல்    ரசாக்கின்   பத்திரிகைச்   செயலாளர்   அடுத்த     பொதுத்     தேர்தலில்     டிஏபி     போட்டியிடுவதைத்     தடுக்க    திட்டமிடப்படுவதைத்      தன்னை    அறியாமலேயே   உறுதிப்படுத்தி  இருப்பதாக    அக்கட்சியின்   எம்பி   ஒருவர்   கூறுகிறார்.

அடுத்த   பொதுத்   தேர்தலில்   டிஏபி    அதன்   சின்னத்தைப்   பயன்படுத்திப்   போட்டியிட   முடியுமா    என்று    தெங்கு    சரிஃபுடின்   தெங்கு   அஹ்மட்    கேள்வி   எழுப்பியிருப்பதை       குளுவாங்   எம்பி   லியு     சின்   தொங்   சுட்டிக்காட்டினார்.

“தெங்கு   சரிஃபுடின்    அவ்வாறு   வினவியது   நஜிப்பின்   உள்வட்டத்தில்  தேர்தலுக்கு   முன்னதாக   டிஏபிக்குத்   தடை  விதிக்கத்    திட்டமிடப்படுவதை    உறுதிப்படுத்துகிறது”,  என  லியு   இன்று   ஓர்    அறிக்கையில்    கூறினார்.

2012-இல்   கட்சித்   தேர்தலில்   முறைகேடுகள்   நிகழ்ந்திருப்பதாக     சர்ச்சை  கிளம்பி    டிஏபிக்குப்  பெரும்   நெருக்கடியை    உண்டாக்கியது.

அதன்    காரணமாக   13வது   பொத்   தேர்தலில்   அக்கட்சி   அதன்   சின்னத்தில்    போட்டியிட   முடியாமல்   தடுக்கப்படும்    சாத்தியம்கூட     இருந்தது.  ஆனால்,   சங்கப்   பதிவகம்   கட்சிக்குத்   தடை   விதிக்கவில்லை.

டிஏபி  2013-இல்  கட்சியில்   மறு   தேர்தலை    நடத்தியது.  ஆனால்,  2014வரை   சங்கப்   பதிவகம் (ஆர்ஓஎஸ்)   டிஏபியின்   மத்திய   செயல்குழுவையை   அங்கீகரிக்கவில்லை.

ஆர்ஓஎஸ்  “கொடூரமாகவும்  ஜனநாயகத்துக்கு   முரணான   வகையிலும்”  டிஏபி-யை   ஒழித்துக்கட்டும்   நோக்கத்துடன்   உள்ளது   என  லியு   கூறினார்.