சாலே: சைபர் அச்சுருத்தலை என்எஸ்சி கண்காணிக்கும்

sallehநாட்டில்   சைபர்   பாதுகாப்புக்கு    ஏற்படும்   மருட்டல்களைக்   கண்காணிக்கும்    பொறுப்பை    அரசாங்கம்     ஏற்கனவே    தேசிய  பாதுகாப்பு   மன்ற(என்எஸ்சி)த்திடம்     ஒப்படைத்திருப்பதாக      தொடர்பு,  பால்லூடக   அமைச்சர்    முகம்மட்   சாலே  சைட்   கெருவாக்   கூறினார்.

Ransomware Wannacry    போன்ற      சைபர்   அச்சுருத்தல்கள்   நாட்டின்    பாதுகாப்புடன்     நெருக்கமாக       தொடர்பு  கொண்டவை    என்பதால்   அதைக்  கண்காணிக்கும்   பொறுப்பு      பல்வேறு   அமைச்சுகளின்   பிரதிநிதிகளைக்   கொண்டுள்ள     எனஎஸ்சி-இடம்   ஒப்படைக்கப்பட்டிருக்கிறது      என்றாரவர்.

“அது   (ரேன்சம்வேர்  வன்னாகிரை  தாக்கம்)   குறித்து    என்எஸ்சி   ஏற்கனவே  அறிக்கை     வெளியிட்டுள்ளது.  மலேசியாவில்   தாக்குதல்    நிகழ்ந்ததாக    தகவல்   இல்லை.  ஆனாலும்   அப்படிப்பட்ட    மருட்டல்கள்   குறித்து    அரசாங்கம்    எச்சரிக்கையாகவே   உள்ளது”.

இப்படிப்பட்ட   தாக்குதல்கள்   நடக்கும்    சாத்தியம்   எப்போதுமே   உள்ளதால்   அதிநவீன   தொழில்நுட்பத்தைக்   கொண்டிருப்பது    அவசியம்    என்று  குறிப்பிட்ட   சாலே,  அப்போதுதான்   அத்தாக்குதல்களை   முறியடிக்க    முடியும்    என்றார்.