டிஎபியைவிட அம்னோ ஆபத்தானதாக மலாய்க்காரர்கள் கருதுகிறார்கள், ஸாம் கூறுகிறார்

 

zamடிஎபியுடன் ஒப்பிடும் போது அம்னோ மிக ஆபத்தானது என்று மலாய்க்காரகள் இன்று கருதுகிறார்கள் என்று முன்னாள் அம்னொ அமைச்சர் ஸைனுடின் மைடின் (ஸாம்) கூறிகொண்டார்.

இனவாதக் கட்சி என்று முத்திரை குத்தப்பட்ட டிஎபி இப்போது அரசியல் ரீதியாக முதுர்ச்சியடைந்துள்ளதுள்ளதோடு முற்போக்கான, தூய, திறன்வாயந்த மற்றும் சமய விவகாரங்களில் குறுகிய மனப்பாங்கிலிருந்து விடுபட்ட கட்சியாக விளங்கிறது என்று அந்த முன்னாள் அமைச்சர் தமது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மலாய் தேசியத்திற்கு எதிரான மிரட்டல் இனிமேல் டிஎபியிடமிருந்து வரப்போவதில்லை என்பதை அதிகமான மலாய்க்காரகள் கண்டு புரிந்து கொண்டுள்ளனர்; அக்கட்சி நாட்டை மலேசியக்காரர் நாடாக்க விரும்புகிறது, ஆனால் அம்னோ பொருளாதார காலனித்துவத்தின் வழி மலேசியாவை சீனாக்காரர் நாடாக்க விரும்புகிறது என்கிறார் ஸாம்.

அதோடு, பாஸ் கட்சியோடு இணைந்து இந்நாட்டை ஆளத்தொடங்கிய்திலிருந்து அம்னோவின் மதச்சார்பற்ற நிலைப்பாடு மற்றும் முற்போக்கான கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் அறிந்துகொண்டுள்ளனர்.

ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 1965 க்கான திருத்தங்கள் விவகாரத்தில் இவ்விரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டது மலாய்க்காரர்கள் அல்லாதவர் துங்கு அப்துல் ரஹ்மான் மற்றும் துன் அப்துல் ரசாக் போன்ற முன்னையத் தலைவர்கள் நிர்ணயத்திருந்த கொள்கைகளை எதிர்மாறான கருத்துகளுடன் நோக்குகின்றனர் என்று உத்துசான் மலேசியாவின் முன்னாள் முதனை ஆசிரியரான ஸாம் எழுதியுள்ளார்.

அதனுடைய தீவிரமான சமய நோக்கத்தை அடைவதற்கு பாஸ் சமய அட்டையைப் பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே என்று கூறிய ஸாம், பாஸுடன் ஒத்துழைக்கும் விருப்பத்தைக் கொண்டுள்ள அம்னோவைக் கடுமையாகச் சாடினார்.

தேசியத்தை தவறாகப் புரிந்துகொண்டு விட்டார்கள் என்பதால் மலாய்க்காரர்கள் இந்நாட்டில் சீனாவின் முதலீட்டை நிராகரிக்கவில்லை என்று கூறும் ஸாம், அவர்கள் அம்னோவின் தேசியத்தில் நம்பிக்கை இழந்து விட்டனர், ஏனென்றால் அம்னோ அதன் தொடக்க நிலையிலிருந்து தடம்புரண்டு விட்டது என்கிறார் ஸாம்.

சீனாவிலிருந்து சீனர்கள் இந்நாட்டிற்கு வருவது குறித்து மலாய்க்காரர்கள் அச்சமடைந்துள்ளனர், ஏனென்றால் அவர்கள் மிகச் சுலபமாக உள்ளூர் சீனர்களுடன் ஒன்றிப்போய்விடுவர். இவர்களுக்கு தாய்நாட்டுடன் இன்னும் வலுவான சார்பு மனப்பான்மை இருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சீனாவுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள புரோட்டோன் கார் சம்பந்தப்ட்ட ஒப்பந்தத்தினால் மலாய்க்காரர்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்பதையும், ரிம55 பில்லியன் முதலீட்டைக் கொண்ட கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டத்தை சீனாவைத் தளமாகக் கொண்ட நிறுவத்திற்கு கொடுத்திருப்பது சீனத் தொழிலாளர்கள் இங்கு வருவதற்கு வழிவகுக்கும் என்பதையும் சுட்டிக்காட்டிய ஸாம், இது போன்ற நடவடிக்கைகளால் மலாய்க்காரர்கள் பீதியடைந்துள்ளனர் என்கிறார்.