1எம்டிபி விவகாரம் பற்றி விசாரிக்க ஓர் அரச விசாரணை ஆணையம் அமைக்கக் கோரும் மனு ஒன்றை பாஸ் கட்சி பேரரசரிடம் அளிக்கப் போவதாக அதன் கோலா நெருஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கைருடின் அமான் ரஸாலி கூறுகிறார்.
“குடிமக்கள் என்ற முறையில், நாங்கள் 1எம்டிபி நிதிகளில் கசிவுகள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓர் அரச ஆணையத்தை உடனடியாக அமைக்கும்படி அரசாங்கத்தை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்”, என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
அமெரிக்க நீதித்துறை மேற்கொண்டுள்ள விசாரணை குறித்து மலேசியர்கள் அவசரப்படக் கூடாது, ஏனென்றால் அது நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறுகிறார்.
அமெரிக்காவிடமிருந்து நீதியை எதிர்பார்க்கக்கூடாது, ஏன்னென்றால் அந்நாடு உலக அரங்கில் முஸ்லிம்களுக்கு இழைத்துள்ள அநீதி, பாலஸ்தீனம் மற்றும் ஈராக் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில், நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஏன் உலகின் போலீஸாக நடந்துகொள்கிறது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நமது குடும்பப் பிரச்சனைகளை வெளியார்களின் தலையீடு இன்றி நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கைருடின் மேலும் கூறுகிறார்.
கடந்த சில நாள்களில், 1எம்டி மீது விசாரணை நடத்த ஓர் அரச விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமென்று பாஸ் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகிறது.
மாமாக் மகாதீர் ஆட்சி காலத்தில் சமஸ்தானாதிபதிகளின் அதிகாரங்களை ஒரு சில புது சட்ட அமலாக்கத்தின் மூலமாக கட்டுப்படுத்திவிட்ட்டான். அதனால் அவர்கள் ஒருபோதும் மகாதிருக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள். அதுபோல அவர்களின் செயல் நிச்சயமாக நஜிப்புக்கு பாதகமாக அமையாது. இந்த சங்கதி நன்றாக தெரிந்த பாஸ் கட்சிக்காரன் நம்மிடம் நாடகம் ஆட ஆரம்பித்துவிட்டான் !
tapah balaji அவர்களே நீங்கள் கூறுவது சரியே. ஆட்சியாளர்களுக்கு காக்காத்திமிரை பிடிக்காது.