டிஏபி எம்பி: ஆர்ஓஎஸ் சச்சரவில் ஜாஹிட் அக்கறை காட்டுவது ஏன்?

dapடிஏபிக்கும்  சங்கப்  பதிவதிக(ஆர்ஓஎஸ்) த்துக்குமிடையிலான    விவகாரத்தில்   துணைப்  பிரதமர்   அஹமட்   ஜாஹிட்  ஹமிடி    அக்கறை   காட்டுவது    குறித்து  கவலைப்படுகிறார்    டிஏபி  கூலாய்   எம்பி    தியோ   நை   சிங்.

அவ்விவகாரம்   தொடர்பில்   அஹமட்   ஜாஹிட்   ஆர்ஓஎஸ்  தலைமை   இயக்குனர்   முகம்மட்   ரஸின்    அப்துல்லாவை    அடுத்த   வாரம்   சந்திக்கப்போவதாகக்  கூறியதுதான்   அவருடைய    கவலைக்குக்   காரணமாகும்.

“ஆர்ஓஎஸ்  அஹ்மட்  ஜாஹிட்டைச்   சந்தித்து  டிஏபி    விவகாரம்    குறித்து    விவாதிக்க  வேண்டிய   அவசியம்   என்ன,  டிஏபியின்  பதிவை  இரத்துச்  செய்ய   சூழ்ச்சி  நடைபெறுகிறதா?”,   என்று  தியோ   இன்று   ஓர்   அறிக்கையில்    வினவினார்.

உள்துறை   அமைச்சருமான    அஹமட்   ஜாஹிட்,   டிஏபி-யை  கலைப்பதற்கு   முயற்சி   நடைபெறுவதாகக்   கூறப்படுவதை    மறுத்துள்ளார்   என்றாலும்,    ஆர்ஒஎஸ்   தலைமை   இயக்குனர்   எதற்காக   அமைச்சருக்கு   ஓர்   அறிக்கையைத்   தயாரித்துக்  கொடுக்க   வேண்டும்   என்றவர்   வினவினார்.

“டிஏபி-இன்   கட்சி  அமைப்பு  விதிகளையும்  மலேசிய   சட்டங்களையும்      கொண்டு   ஆர்ஓஎஸ்  முடிவெடுக்க   இயலாதா?

“மற்ற    சங்கங்களின்   விவகாரங்கள்   குறித்தும்    அஹமட்  ஜாஹிட்டுக்கு  இப்படித்தான்    ஆர்ஓஎஸ்   அறிக்கை  தயாரித்துக்   கொடுக்கிறதா?  டிஏபிக்கு  மட்டும்  ஏன்  இந்தத்   தனிக்  கவனிப்பு?”,  என்றவர்   வினவினார்.