தலைமை நீதிபதி(சிஜே) முகம்மட் ரவுஸ் ஷரிப்-பின் பணிக்காலத்தை 66 ஆண்டுகள் 6 மாதங்களுக்குப் பின்னர் மேலும் நீட்டிக்க இயலாது என முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட் கூறுகிறார்.
தம் வலைப்பதிவில் இதைக் குறிப்பிட்டுள்ள ஹமிட், அரசமைப்பு அவ்வாறு அவ்வாறு வலியுறுத்துவதாகக் கூறினார்.
ஹமிட் 2007 நவம்பரிலிருந்து 2008 அக்டோபர்வரை தலைமை நீதிபதியாக இருந்தவர்.
கூட்டரசு அரசமைப்பின் பிரிவு 125(1), கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதி 66வயதுவரைதான் பதவியில் இருக்க முடியும் என்கிறது.
அச்சட்ட விதி கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதி (தலைமை நீதிபதி உள்பட) கட்டாய பணிஓய்வு பெறும் வயது 66 என்பதைத் திட்டவட்டமாகக் குறிப்பிடுவதாக ஹமிட் கூறினார்.
“ஆனால், பேரரசர் பதவிக்காலத்தை நீட்டிக்கலாம். அதுவும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கலாம். அதற்குமேல் முடியாது”, என்றாரவர்.
நீதிபதி முகம்மட் ரவுசுக்கு பிப்ரவரி 4-இல் 66 வயது ஆனபோது அவரது பதவிக்காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அந்த ஆறில் ஐந்து மாதங்கள் முடிந்து விட்டன.
முகம்மட் ரவுசின் பதவி 66வயது ஆறு மாதங்கலுக்குப் பிறகும் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருப்பது குறித்து ஹமிட் கருத்துரைத்தார்.