டிஏபி பதிவு இரத்துச் செய்யப்படலாம் என்று ஊகங்கள் பரவுவதற்குக் காரணம் பிரதமரின் பத்திரிகைச் செயலாளர்தான்: டிஏபி குற்றச்சாட்டு

guanசங்கப்  பதிவகம்  தன்   பதிவை   இரத்துச்   செய்யக்கூடும்   என்று   ஊகத்துக்குக்   காரணம்     தானல்ல    என்று   மறுக்கும்    டிஏபி,   பிரதமரின்   செயலாளர்   தெங்கு    ஸரிஃபுடின்   தெங்கு    அஹமட்தான்   முதன்முதலில்   அப்படியொரு  ஊகத்தை   வெளியிட்டார்  என்று  கூறுகிறது.

டிஏபி   குளுவாங்   எம்பி    லியு    சின்   தொங்கின்   கட்டுரை   ஒன்றுக்கு      ஸரிஃபுடின்   எதிர்வினை   ஆற்றியபோது  அப்படியொரு   ஊகத்தை   வெளியிட்டார்    என  டிஏபி   தலைமைச்   செயலாளர்    லிம்   குவான்   எங்   கூறினார்.

“உள்துறை   அமைச்சர்   அல்லது    ஆர்ஓஎஸ் -ஸின்  அதிகாரம்    தன்   கையில்  இருப்பதாக   நினைத்துக்கொள்ள வேண்டாம்   என்று    பிரதமரின்   பத்திரிகைச்   செயலாளருக்கு   யாராவது   அறிவுரை  கூற   வேண்டும்”,  என   பினாங்கு   முதலமைச்சருமான   லிம்   இன்று    செய்தியாளர்    கூட்டமொன்றில்   கூறினார்.

14வது   பொதுத்   தேர்தலில்   தன்   எதிரிகள்   நேர்மையான  முறையில்  போட்டியிட்டு   தன்னை  வெல்வதையே   டிஏபி   விரும்புகிறது   என்று  லிம்  கூறினார்.

டிஏபியைப்  பொருத்தவரை   அது   நேர்மையான  முறையில்தான்  தேர்தலைச்   சந்திக்க   விரும்புகிறது   என்று   கூறிய    லிம்,   அதன்   எதிரிகளும்   அவ்வாறே   நடந்துகொள்ள    வேண்டும்  என்று  வலியுறுத்தினார்.