தலைமை நீதிபதியின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்கிறார் முன்னாள் தலைமை நீதிபதி

 

CJextensionunconstitutionalதற்போதைய தலைமை நீதிபதி முகமட் ராவுஸ் ஷரிப் 66 வருடம் 6 மாத வயதை எட்டிய பின்னர் அவருடைய பதவி காலத்தை மேலும் நீட்டிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட் கூறுகிறார்.

தாம் இதனைக் கூறுவதற்கு தமக்கு நீதிபதி ரவுஸை பிடிக்கவில்லை என்பதாகாது என்று ஹமிட் அவர் வலைத்தளப் பதிவில் கூறுயுள்ளார். அரசமைப்புச் சட்டத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதே இதன் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

அரசமைப்புச் சட்டம் பிரிவு 125(1) இன்படி பெடரல் நீதிமன்றத்தின் நீதிபதி 66 ஆவது வயதை அடையும் வரையில் அல்லது கூடுதலாக இன்னொரு ஆறு மாதத்திற்கு பேரரசரின் ஒப்புதலோடு பதிவியில் இருக்கலாம் என்று ஹமிட் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், பேரரசர் பதவியை ஆறு மாதத்திற்கு மட்டுமே நீட்டிக்க முடியும், அதற்கு மேல் இல்லை. 66 வருடம் 6 மாத வயதை எட்டி விட்டால் ஒரு நீதிபதியின் பதவியை நீட்டிக்க முடியாது என்று ஹமிட் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

இந்நிலையில், “ராவுஸுக்கு சிறந்த வழி நியமனத்தை ஏற்க மறுத்தல்தான்” என்று ஹமிட் மேலும் கூறுகிறார்.