மலேசிய எதிரணியினர் இரண்டு சர்வாதிகாரிகளால் வழிநடத்தப்படுகிறது என்று தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறியதோடு அதற்கான வரலாற்றுச் சான்றுகளை எடுத்துரைத்தது இறுதியில் அவரது வரலாற்று அறிவு எவ்வளவு மட்டரகமானது என்றும் அவர் மீண்டும் பள்ளிக்குப் போகவேண்டும் என்றும் டிஎபி மூத்த தலைவர் கிட் சியாங் சாடும் அளவிற்குச் சென்று விட்டது.
அமைச்சர் சாலே அவரது வலைத்தள பதிவில் ஏக காலத்தில் இரண்டு சர்வாதிகாரிகள் இருக்கலாம் என்பதற்கு “வரலாற்று சான்றுகளை” அளித்தார். இக்கருத்து அர்த்தமற்றது என்று கிட் சியாங் பதில் கூறினார்.
சாலே அவரது பதிவில், ரஷியாவில் ஜோசெப் ஸ்டாலின் மற்றும் விலாடிமிர் லெனின், மற்றும் ஃபிரான்ஸில் மேக்ஸிமில்லன் ரோபெஸ்பியர் மற்றும் நெப்போலியன் ஆகியோர் ஒரே நேரத்தில் சர்வாதிகாரிகளாக இருந்தனர் என்றார். இது சீனாவிலும் நடந்துள்ளது என்று கூறிய சாலே, குயூபாவில் சே குவாரா புரட்சியை கைவிட்டார், ஏனென்றால் அவர் பிடல் கேஸ்ட்ரோவுடன் கூட்டு-சர்வாதிகாரியாக இருக்க விரும்பவில்லை என்றார்.
“மலேசிய அமைச்சர்களின் கல்வித் தரம் அளவிட முடியாத அளவிற்கு படுபாதாளத்தில் கிடப்பதை” அமைச்சரின் அதிர்ச்சி அளிக்கும் எடுத்துக்காட்டுகள் வெளிப்படுத்துகின்றன”, என்று கூறிய கிட் சியாங் அவர்களுக்கு மீண்டும் கல்விப் பயிற்சி அளிக்கக் கோரிக்கை விடுத்தார்.
சர்வாதிகாரிகள் பற்றி சாலேயின் மூன்று பத்தி பதிவு முற்றிலும் போலியானது மற்றும் வரலாறு பற்றிய ஒவ்வொரு பத்தியும் தவறானது. இது அரசியல் எதிரிகளுக்கு எதிராக தவறான, பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு ஏற்றது என்று கிட் சியாங் கூறினார்.
36 அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் அதிர்ச்சியடைய மாட்டார்கள் அல்லது எவரும் அதிர்ச்சியடைய வேண்டுமென்பதற்கான காரணத்தைக் காண மாட்டார்கள். இதற்காகத்தான் அமைச்சர்கள் அனைவரும் மீண்டும் கல்விப் பயிற்சி திட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது கல்வியின் தரம் வீழ்ச்சி கண்டிருப்பதாக பல புகார்கள் கூறப்படுகின்றன. சாலே அவரது வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது மலேசியாவின் கல்வித் தர வீழ்ச்சிக்கு மிக வலுவான ஆதாரமாகும் என்று கிட் சியாங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறார்.
சாலேயின் போலியான வரலாறு
சாலே குறிப்பிட்டுள்ளது போல் ஸ்டாலினும் லெனினும் ஏக காலத்தில் சர்வாதிகாரிகளாக இருந்ததில்லை. ஸ்டாலின் 1929 லிருந்து 1953 வரையில் சோவியத் யூனியனின் சர்வாதிகாரியாக இருந்தார். லெனின் ஜனவரி 1924 இல் காலமானார்.
உண்மையில், லெனின் சிகிட்சை பெற்று வரும் போது, ஸ்டாலின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும் ஏன்று ஆலோசனை கூறியிருந்தார்.
சாலேயின் ஃபிரன்ச் வரலாறு பற்றிய கூற்று பிரமாதம். ரோபெஸ்பியரும் நெப்போலியனும் ஒரே காலத்தில் சர்வாதிகாரிகளாக இருந்தார்கள் என்கிறார் சாலே.
ஃபிரன்ச் புரட்சியின் போது பயங்கர ஆட்சிக்குத் தலைமையேற்றிருந்த ரோபெஸ்பியர் பல்லாயிரக்காணவர்களை கொலைக்களத்திற்கு அனுப்பினார். இறுதியில் அவரும் ஜூலை 28, 1794 இல் கொல்லப்பட்டார்.
1794 இல், நெப்போலியன் ஃபிரன்ச் இராணுவத்தில் ஓர் இளம் ஜெனரலாக இருந்தார். 1799 இல்தான் அவர் ஒரு புரட்சிக்குப் பின்னர் உயர்மட்ட பதிவிக்கு நியமிக்கப்பட்டார். அவரும் ரோபெஸ்பியரும் ஒரே காலத்தில் சர்வாதிகாரிகளாக இருந்ததில்லை என்று கிட் சியாங் தெரிவித்தார்.
சீனாவில் ஒரே நேரத்தில் இரண்டு சர்வாதிகாரிகளா? அவர்களின் பெயர்களை வெளியிடுமாறு சாலேயை கிட் சியாங் கேட்டுக்கொண்டார்.
சே குவாரா பற்றிய சாலேயின் கூற்று குவாராவின் தீவிர ஆதரவாளர்களுக்கு வலிப்பை உண்டாக்கிவிடும் என்றார் கிட் சியாங்.
குவாரா அவரது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் பொலிவியாவில் ஒரு புரட்சி கொரில்லா படைக்குத் தலைமையேற்றிருந்தார். அவரை பொலிவியாவின் இராணும் கைது செய்து 1967 இல் சுட்டுக் கொன்றது.
கோபம் வர்ர மாதிரி காமிடி பண்ணுவதே நமது அமைச்சர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.
இதில் அதிர்ந்து போவதற்கு ஒன்றும் இல்ல லிம் கிட் சியாங் அவர்களே. எல்லாம் தெரிந்தது தானே– அரை வேக்காடு நாதாரிகள் நாட்டை நாற அடித்து விட்டான்கள்-காக்காத்திமிர் ஆரம்பித்து வைத்தது. தகுதி திறமை ஒரு தரம் நடைமுறையில் இருந்திருந்தால் இவ்வளவு அநியாயம் நடக்காது. தரம் தேவை இல்லை என்று ஆரம்பித்து வைத்தவன் காக்காத்திமிர்.தோல் நிறம் மட்டும் போதுமே -பிறகு எப்படி? இவன்கள் தொட்டது எது உருப்படியாக இருக்கிறது? ஆனாலும் யாருக்கும் அக்கறை இல்லை–அதிலும் மலாய்காரனுக்கு அக்கறை கிடையாது.காரணம் அவனுக்குத்தான் எல்லாம் சுலபமாக இனாமாக கிடைக்கிறதே.
என் தாய் தமிழ் சொல்வது முற்றிலும் உண்மை. தற்போது நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இந்த மகாதிமிர்தான். இந்த மகாதிமிரின் அருகில் உட்கார்ந்து கொண்டு, நியாயம், அநியாயம் என பேச வந்து விட்டார் லிம் கிட் சியாங். கிட் சியாங் மீது எனக்கிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கை, விடை பெற்றுக் கொண்டது.